ஆட்சி, அதிகாரம் நிரந்தரம் அல்ல
சமூக வலைதள பதிவுக்காக, தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரவீன்ராஜ் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. போதை பொருள், பாலியல் குற்றங்கள், முதியவர்கள் கொலை என, ௧,௦௦௦ சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் இருக்கின்றன. தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகள், பேசுபொருளாகி விடக் கூடாது என்பதற்காக, முழு நேரமும் சமூக வலைதளங்களை கண்காணிக்க மட்டுமே, காவல் துறையை பயன்படுத்த, முதல்வர் ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.,வினர் மீது, புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வினரை கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தை தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல. - அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்