உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐபோன்களை உடைத்து கடலில் வீசிய சாதிக்: குற்றபத்திரிகையில் தகவல்

ஐபோன்களை உடைத்து கடலில் வீசிய சாதிக்: குற்றபத்திரிகையில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34; அசோக்குமார்,34, சதானந்தம், 45 ஆகியோரும் கைதாகி, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில், ஐந்து பேர் மீதும், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர்.அதிலுள்ள தகவல்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான குற்ற பத்திரிகையுடன், வங்கி கணக்குகள் மற்றும் தடயவியல் துறை ஆய்வு முடிவுகள் என, 42 பேரிடம் பெற்ற சாட்சியங்கள், 97 ஆவணங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த வெளிநாட்டு கரன்சிகளை, ஜாபர் சாதிக், சென்னை பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் அருகேயுள்ள மணி எக்சேஞ்ச் நிறுவனம் வாயிலாக மாற்றி உள்ளார். போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு ஐபோன்களை உடைத்து, காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் வீசியுள்ளார். ஆஸ்திரேலியா, மலேஷியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தியது உண்மை என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். அதற்கான 'ஆடியோ மற்றும் வீடியோ' பதிவுகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மே 09, 2024 12:00

குற்றவாளிகளுக்கு தமிழகத்தில் சன்மானம் கொடுத்த போலீஸ் உயர் அதிகாரி, ஆட்சியில் உள்ள பெரும் தலைவர்கள், இவனை, செந்தில் பாலாஜியை அம்போ என்று கைவிட்டதுபோல கைவிட்டுவிட்டனர்


NANDAKUMAR
மே 09, 2024 11:54

BJP is waiting for result of Parliamentary election If situation comes as DMK support is required to form the new Govt?? So, slow and soft approach is going on


veeramani
மே 09, 2024 09:39

இந் திய அவர்களை சீரழிக்கும் போதை மருந்து விற்பனைசெய்த பிரபல கட்சியின் தலைவர் என மக்களையும் கட்சியின் தலைமையும் ஏமாற்றியுள்ளார் சிங்கப்பூர் போல மரண தண்டனை ஒன்றே சரியானது


Duruvesan
மே 09, 2024 07:51

அப்பாடி திராவிட மாடல் வளர்ப்பு அப்படி, யாரையும் காட்டி கொடுக்கல, கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க


duruvasar
மே 09, 2024 07:46

பாலூட்டி வளர்த கிளி எசமானின் பெயரை கூறி விடுமோ என அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது எதுவும் ஜூன் க்கு பிறகு தெரிந்துவிடும் போதை மருந்து விற்று கிடைத்த காசை....


raja
மே 09, 2024 06:27

கூட்டாளி திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற உதயையும் உதைகணும் என்று தமிழன் எதிர்பார்க்கிறார் கள்


Kasimani Baskaran
மே 09, 2024 06:00

கேஜ்ரிவாளின் நண்பன் போல தெரிகிறது கடலில் உடைத்து வீசிய பாகங்களை எடுத்தால் ஆப்பிள் ஒத்த்துழைப்பில் தகவல்களை திரட்டுவது எளிது தவிரவும் ஆப்பிள் நிறுவனம் போதைப்பொருள் ஒழிப்பில் ஆர்வம் காட்டிவருகிறது தகவல்களை ஐகிளவுடில் பதிவேற்றம் செய்திருந்தாலும் எளிதாக எடுத்து விட முடியும் எப்ஏ மட்டும் சரியாக செட் செய்திருந்தால் போதுமானது


Kasimani Baskaran
மே 09, 2024 06:00

கேஜ்ரிவாளின் நண்பன் போல தெரிகிறது கடலில் உடைத்து வீசிய பாகங்களை எடுத்தால் ஆப்பிள் ஒத்த்துழைப்பில் தகவல்களை திரட்டுவது எளிது தவிரவும் ஆப்பிள் நிறுவனம் போதைப்பொருள் ஒழிப்பில் ஆர்வம் காட்டுவருகிறது தகவல்களை ஐகிளவுடில் பதிவேற்றம் செய்திருந்தாலும் எளிதாக எடுத்து விட முடியும் எப்ஏ மட்டும் சரியாக செட் செய்திருந்தால் போதுமானது


Palanisamy Sekar
மே 09, 2024 05:42

ஜாபரிடமிருந்து காசோலை மூலமாக பணம் பெற்றவர்களை விசாரிக்க மாட்டார்களா என்ன? நடிகர் சங்க கட்டிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த மந்திரியோடு புகைப்படம் எடுத்த பின்னும் இன்னும் ஏனிந்த தயக்கம் அவரை கூப்பிட்டு விசாரிக்க விசாரணையில் தொய்வுதான் தென்படுகின்றது ஏன் என்று பலருக்கும் குழப்பமாகவே இருக்கிறது விசாரணை வளையத்துக்குள் எவரையும் கொண்டுவந்து விசாரிக்க அனுமதி உள்ளபோது ஒருசிலரை மட்டும் கடமைக்கு விசாரித்து அனுப்பியது போலவே தெரிகின்றது காரணம் விசாரணைக்கு போயிட்டு வந்த அமீர் பேட்டிகளில் தன்னை மிக மிக உத்தமனை போல பேசுகின்றார் ஒரே குழப்பமாக உள்ளதே சாமானியர்களுக்கு மட்டுமே விசாரணையில் கடுமை தெரியுமா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ