உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாய்மர படகு போட்டி

பாய்மர படகு போட்டி

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாய்மர படகு போட்டி நடந்தது. தொண்டி அருகே பாசிபட்டினம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் விழா, ஜூலை 27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல், காவடி மற்றும் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று கடலில் பாய்மரபடகு போட்டி நடந்தது. 11 படகுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 6 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கபட்டு, படகுகள் சீறிபாய்ந்து சென்றன. காளிமுத்து முதல் பரிசு, சேதுராமன் இரண்டாம் பரிசு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்