உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்பு

சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்பு

சென்னை : சாலை விபத்தில் சிக்கியசைதை துரைசாமியின் மகன் உடல், எட்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி. அவரது மகன் வெற்றி துரைசாமி, 45; ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த 4ம் தேதி, கின்னுார் பகுதியில் வாடகை கார் ஒன்றில் பயணம் செய்தபோது, சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வெற்றியின் நண்பரான திருப்பூர் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த கோபிநாத், சிம்லா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், விபத்தில் சிக்கி காணாமல் போன, வெற்றி துரைசாமியை தேடும் பணியில், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், கடற்படையினர் ஆகியோர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஒன்பதாவது நாளான நேற்று பிற்பகல், 2:00 மணியளவில் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து, 2 கி.மீ., தொலைவில், பாங்கி நலா பகுதியில், வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர்.உடல் மீட்கப்பட்ட பகுதியில், மைனஸ் 7 முதல் 15 வரை குளிர் நிலவுவதால், உடல் அழுகாமல் உள்ளது. வெற்றியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், சென்னை கொண்டு வரப்படும் என, கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, வெற்றியின் மறைவுக்கு அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ponssasi
பிப் 13, 2024 12:18

ஆழ்த்த இரங்கல். மாற்று கருத்து கொண்டோரும் திரு சைதை துரைசாமியின் சேவையை பாராட்டாமல் இருக்கமுடியாது, அவரை பின்பற்றி வெற்றியும் வந்துள்ளார். துரைசாமிக்கும் அவரது குடும்பம் அவரது அறக்கட்டளையில் படித்த படிக்கும் மாணவர்களுக்கு மன பலத்தை இறைவன் அருளட்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை