உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்

சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் அருகே மூதாட்டியை கொன்று நகை திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ptr0qxo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுபற்றிய விவரம் வருமாறு: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சின்னேரி காட்டில் 70 வயது மூதாட்டி சரஸ்வதி என்பவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். கடந்த 20ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ந்த டி.ஐ.ஜி., உமா மகேஸ்வரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர் விசாரணையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய நபரை சேலம் மாவட்டம் சங்ககிரியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.அந்த வாலிபர் பெயர் நரேஷ் குமார் வயது 25. ஓமலூர் அருகே கட்டிகாரன் ஊரை சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு பகுதியில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
மே 24, 2025 18:24

இது போன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் திமுக ரௌடிகளையும் சுட்டுப் பிடிக்க முடியாதா?


V K
மே 24, 2025 12:12

டாஸ்மாக் கொள்ளை எப்படி சுடுவிங்கோ ஆபீசிர்


Raghavan
மே 24, 2025 09:33

சுடுவதுதான் சுடறீங்க நீரை நெஞ்சில் சுட்டு தள்ளவேண்டியதுதானே. இவனை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றால் அங்கு அவனுக்கு கண்டிப்பாக ஜாமின் கிடைக்கும். வழக்கு இழுக்கும் ஒரு 5 அல்லது 6 வருடங்களுக்கு. மக்கள் வரிப்பணம் வீண் செலவு கால விரயம் வேறு.


Kasimani Baskaran
மே 24, 2025 09:10

12 வழக்குகளிலும் நீதிமன்றம் ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை.


Padmasridharan
மே 24, 2025 08:17

கோர்ட்ல இவன, இந்த மாதிரி ஆட்களை தனியா குற்றம் செய்து கெத்து, பருத்தி வீரன் கார்த்தி மாதிரி காமிக்கிறவங்கள அவங்க வீட்டு நபர்கள் முன்னாடி விசாரிச்சு தலை குனியராங்களா இல்ல தலை நிமிரும் பணிகளை செஞ்சாங்களானு புரிய வெக்கணும். ஒரு / இரு குற்றம் செஞ்சிமுடிச்சவுடனே காவலர்கள் எவ்வளவு பணம் வாங்கி அடித்து வாங்கினாங்கனும் கணக்குல அடங்கும் இந்தமாதிரி தொடர் குற்றம் செய்யும் ஆட்களுக்கு


சமீபத்திய செய்தி