உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் ஆலை வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்கிறதா? அமைச்சர் சொன்ன பதில்

சாம்சங் ஆலை வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்கிறதா? அமைச்சர் சொன்ன பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலை வேறு மாநிலத்திற்கு செல்வதாக வெளியான தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் அதை ஏற்காமல் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விவகாரம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தொழிலாளர்களின் நலன்கள், படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு தொடக்கத்தில் இருந்து இந்த பிரச்னையை அணுகி வருகிறது. தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேச்சு வார்த்தையின் போது முன் எடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளை சாம்சங் நிறுவனத்தினர் ஏற்று கொண்டுள்ளனர். அதற்கான ஒப்பந்தத்தையும் சாம்சங் நிறுவனத்தினர் மேற்கொண்டு இருக்கின்றனர்.குறிப்பாக சிறப்பு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.5000 தரப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் இந்த ஊக்கத்தொகை மாதம்தோறும் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர் உயிரிழந்து விட்டால் சிறப்பு நிவாரணமாக உடனடியாக 1 லட்சம் ரூபாய் தரப்படும். இதுபோன்ற பல கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்றி ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருக்கும் சி.ஐ.டி.யூ., அமைப்பினர் தங்களின் பதிவு குறித்து போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கின் முடிவின் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும். இதுபற்றிய விவரம் சி.ஐ.டி.யூ., அமைப்புக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யூ., அமைப்பு கைவிடவேண்டும் என்று அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.சாம்சங் தொழிலாளர்களை வீடு புகுந்து போலீசார் கைது செய்யவில்லை. வேனில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியிருக்கின்றனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் போது சிலர் போலீசாருடன் மோதல் போக்கை கடைபிடித்தனர்.எனவே அவர்களை கைது செய்யவே போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு உள்ளனர்.யாரையும் கைது செய்யும் எண்ணமும், நோக்கமும் அரசுக்கு இல்லை. அவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியது இந்த அரசாங்கம். யாரையும் ஒருபோதும் வீடு புகுந்து இந்த அரசு கைது செய்யாது. சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் தொழிலாளர் நலத்துறைக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், தொழிற்சாலையின் எதிர்ப்பால் தொழிற்சங்க பிரச்னை கோர்ட்டில் உள்ளது.சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தொழில் நடத்த தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலை உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த பிரச்னையை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யூ., அமைப்புக்கும் அரசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஏற்கனவே கூறியபடி கோர்ட் என்ன சொல்கிறதோ அதை அரசாங்கம் நிறைவேற்றும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ramesh
அக் 10, 2024 20:31

இதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை. சிஐடியு புகுந்தால் அது தானாகவே நடக்கும். இது ஆமை வீடு புகுந்தது போல்.


Ramesh Sargam
அக் 09, 2024 21:58

தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அதுதான் நடக்கும்.


தாமரை மலர்கிறது
அக் 09, 2024 20:41

தமிழகத்தில் வேலை செய்ய விரும்பாத தொழிலாளிகள் இருப்பதால், மத்திய அரசே சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்ல உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும். அதற்கான நிதியையும் கொடுக்க வேண்டும். தெனாவெட்டாக திமிர்பிடித்து தொடர்ந்து போராட்டம் செய்யும் தொழிலாளிகள் வேலை இழந்து, வேறொரு கம்பெனிக்கு சென்று வேலை தேடி அலைவது தான் அவர்களுக்கு கொடுக்கப்படும் சரியான தண்டனையாக அமையும்.


Lion Drsekar
அக் 09, 2024 19:15

இந்த வகையில் நான் ஒருவன் இருக்கிறேன் தொழில் துவங்க நிலத்தை வாங்கினேன் , அதில் ஒரு பனைமரம் இருந்தது அதற்கு உரிமை கோறி திருமுடிவாக்கத்தில் பல லட்சம் முதலீடு செய்து ஆரம்பித்த எனது இடத்தை வாயில் கேட்டை உடைத்து, பணியில் இருந்த தொழிலாளர்களை அடித்து, ஓடிக்கொண்டு இருந்த இயந்திரங்களை நிறுத்தி, அப்போதைய ஊர்த்தலைவர் திரு முருகன் செய்யாத அட்டகாசம் இல்லை, அடுத்த நிமிடம் அப்போதைய முதல்வர் கலைஞரிடம் நான் நேரில் சென்று புகார் அளித்த அடுத்தாஹ் நொடியில் அவர் எனக்கு குடும்ப நண்பராகிவிட்டார், அடுக்கிக்கொண்டே போகலாம், ஒவ்வொரு முதல் போட்டவர்களும் ஆங்காங்கு வேலைக்குப்போகாமல் , உழைக்காமல் , கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து அவர்களது தேசியக்குடியை நட்டு அதை வைத்துக்கொண்டு பல லட்சம் கோடி பணம், ஈட்டிவருகிறார்கள், இப்படியே சென்றால் நாடு எங்கே போகும், என்னுடைய நண்பர்கள் பல தொழிலதிபர்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றால் இவ்வளவு அபராதம் , என்று தவறுக்கு ஏற்ப அபராததாம் விதிப்பதையும் , அரசியல் கட்சியினர்களின் பிறந்தநாள், பிறந்தநாள் என்று எல்லா நாளுக்கும் தங்களை உட்படுத்தி தொழில் செய்து வருகிறார்கள், ஒரு தொழில் துவங்குபவர்கள் ஒரு நிலத்தை வாங்குவது மிகவும் கடினம், அப்படியே வாங்கிவிட்டால் ஒவ்வொரு கட்டிடம் கட்ட ஆட்கள் நியமிப்பது, கட்டிடய பொருட்கள் மணல் கற்கள், கட்டி முடித்த பின்பு மின்சார உபகரணங்கள், வேலைக்கு வைக்கப்படும் ஆட்கள் எல்லாமே அந்த ஊரில் இருக்கும் நாட்டைமைகளின் கைகளில்தான் இருக்கிறது, இதற்க்கு ஒத்துழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் நிலை, லஞ்சம் பணம் போட்டவர்கள் இந்த தொல்லைகளால் சீக்கிரம் மரித்துப்போவார்கள் ஆனால் அவர்கள் இறக்கும் முன்பாக மக்களுக்காக பணியாற்ற வந்தவர்கள் பல தலைமுறைக்கு ,, ஹிரண்யாய நமஹ


sankaranarayanan
அக் 09, 2024 18:55

தமிழ்நாட்டில் பெருங்களத்தூர் ஹிந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை மூடியாகிவிட்டது ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை மூடியாகிவிட்டது தூத்துக்குடி ஸ்டெரிலைடு ஆலை மூடியாகிட்டது போர்டு மோட்டார் மூடியாகிவிட்டது இப்படி எல்லா தொழிற்ச்சாலைகளும் மூடு விழாக்காணும் நாடாகவே தமிழகம் விளங்குகிறது எப்போதுதான் இந்த அவல நிலை மாறுமோ


Kasimani Baskaran
அக் 09, 2024 18:19

மாநில அரசு கொடுக்கும் ஆதரவுக்கு தலைவணங்கி போர்டு நிறுவனம் கூட புதிதாக நாலு ஆலைகளை தமிழகத்தில் நிறுவப்போகிறார்களாம்.


sundaran manogaran
அக் 09, 2024 17:28

அமைச்சர் ஒரு கதை சோலாகிறார் கம்யூனிஸ்ட் தோழர் சவுந்தரராஜன் வேறுமாதிரி சொல்கிறார்... ஆக தி.மு.க வின் செயல்கள் எல்லாம் சொதப்பல்.... ஆண்டவன் தான் தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்..


Rajan
அக் 09, 2024 17:24

கூட்டணியில் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். கமிஷன், தொழிலாளர் பிரச்சினை, மின்சார விலை போன்றவற்றை பார்த்து இனிமேல் அந்நிய முதலீடு வருமா?


M Ramachandran
அக் 09, 2024 17:01

எதிர் பார்த்த ஒன்று. நோயாக்கியா ஆலய் மூடு விழா. பல தொழிற்சாலைய்ய கள் மூடு விழா கண்டுள்ளது. இது தான் திராவிடம். அடுத்த மம்முதா ஆட்சி. தெரியாமல் டாடா நிறுவனம் கால் தடம் பதிக்க எண்ணுகிறது. காமராஜர் காங்கரஸ் ஆட்சியில் நல்ல திட்டம் ஆகுக பட்டு பல மத்திய மாநிலங் தொளிர்ச்சாலைகள் தமிழ் நாட்டில் வந்துள்ளன. பல அணைகளும் கட்ட பட்டன விவடாயம் ஒங்க. எப்போலா இந்த திருடர்கள் ஆட்சியில் அமர்ந்தார்களோ கட்டிங் கமிஷின் கரப்ஷன் தான். எங்கெங்ங்கு முடியுமோ அங்கெல்லாம் கரப்ஷன் தான். எல்லா வற்றிலும் தகிடு தித்தம். மன்னார் கொல்லையய இஙகு நடந்துள்ளது மிக அநியாயம். ஆற்றில் உள்ள கண்மாய்கள் வழியாக வெள்ள காலத்திலும் நீர் பாய வதில்லை அந்தளவிற்கு ஆற்றின் மணல் சுரண்ட பட்டு நீர் ஓடும் வழித்தடத்தில் வயல் களுக்கு நீர் பாயா ஆங்கிலேயன் காலத்தில் கட்ட பட்ட கண்மாய் களுக்கும் கிளேர் செல்வதால் சொல்ல ஒன்னா கஷ்டத்தில் விவசாயிகள். அட்டுழியத்திற்கு அளவெ இல்லை. இதில் வாய் சவடால் வேரே. அது போதாது என்று மக்கள் அஆட்சிய போய் குடும்ப ஆட்சி முறைய்ய தொடக்கி வைத்து விட்டார்கள்.


அங்குச்சாமி
அக் 09, 2024 16:41

வேற மூலம்.இல்லை. வேற நாட்டுக்கே கொண்டு போயிருவாங்க. நோக்கியா மாதிரி. அப்புறமா இவிங்க வாயிலும், வயித்திலும் அடிச்சிக்கிட்டு அழலாம்.


புதிய வீடியோ