உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்: கவர்னர் ரவி

அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: 'அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது' என கவர்னர் ரவி பேசினார்.கன்னியாகுமரி, தாமரைப்பதியில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில், அய்யாவழி ஆய்வு மையத்திற்கு தமிழக கவர்னர் ரவி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பேசியதாவது: அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான்.

சனாதன தர்மம்

ஆங்கிலேயர்கள் கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர். பிரிட்டன் பார்லிமென்டில் ஹிந்துக்கள், ஹிந்து தர்மம் குறித்து கண்டனம் தெரிவித்தனர். முன்பு ஜாதிய அடிப்படையில் பிரிக்கப்பட்டு பலர் கோவிலில் கூட நுழைய முடியாமல் இருந்தனர். கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக அவதரித்தார். சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார். அய்யா வழியில் நமது நாட்டை வழி நடத்தி வருபவர் நமது பிரதமர் மோடி. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

AMLA ASOKAN
டிச 12, 2024 22:04

மசூதிக்குள் அரசன் வந்தாலும் எளியவர் வந்தாலும் குல்லா போட்டு சாதாரண ஆளாக தோள்தொட்டு வரிசையாக நின்று தான் வழிபடுவார்கள் . இங்கே இந்த கவர்னருக்கு மட்டும் ஏன் இந்த ஜரிகை தலைப்பா , முதல் மரியாதை ?


Bala
டிச 19, 2024 03:20

திமுக மந்திரியாக இருந்த செஞ்சி மஸ்தான் பலமுறை கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அவருக்கும் இதே மரியாதையை செய்தார்கள் கோவில் நிர்வாகத்தினர். ஆமா மசூதி விடுங்கள், மெக்கா மதீனா ஊருக்குள்ளேயே முஸ்லீம் அல்லாதவர்கள் செல்லமுடியாது தெரியுமா?


Sivagiri
டிச 12, 2024 21:30

ஹிந்து மதத்தில், பரமசிவன், சக்தி/அம்மன், கார்த்திகேயன்/ முருகன், கணபதி, இவர்களை வணங்குபவர்கள் சைவர்களாகவும், விஷ்ணுவை பிரதானமாக வணங்குபவர்கள் வைஷ்ணவர்களாகவும், அழைக்கப்படுகிறார்கள்.. விஷ்ணு என்ற பெருமாளை வணங்குபவர்கள் மட்டுமே - சனாதனம் என்ற வார்த்தையை, பிரயோகிக்கிறார்கள் - சைவ ஆலயங்களில் - விஷ்ணு / லட்சுமி உட்பட - எல்லா தெய்வங்களும், இருக்கிறார்கள் - ஆனால் விஷ்ணு கோவில்களில், சைவ தெய்வங்கள் எதுவும் உள்ளே நுழைய முடியாது - சைவர்களை விட, வைணவர்களே சனாதனம் என்ற பல பாகுபாடுகளை ஜாதி பாகுபாடுகள் உட்பட - பல கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டுள்ளார்கள் - இதெல்லாம் ஒரு விஷயத்தை உணர்த்துகிறது - அதாவது, ஆதிகாலம் முதல் சைவமே - கைலாயம் முதல் கன்னியாகுமாரி வரை - பாரத தேசத்தில் இருந்து வருகிறது - வைணவம் எங்கிருந்தோ புகுந்தது, வைணவர்கள், சைவர்களை சைவ பூமியை - சைவ தேசத்தை கைப்பற்ற, சைவம் வைணவம் எல்லாம் ஒன்றுதான் என்ற வகையில் உள்ளே நுழைகிறார்கள். சைவர்களுக்குள்ளே பல பாகுபாடுகளை கற்பித்து புகுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிகளை புகுத்துகிறார்கள், சிவாலயங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கு அருகிலேயே விஷ்ணு கோவில்களை கட்டுகிறார்கள்... முடிந்த அளவு சைவ ஆலயங்களிலும் பெருமாளை லட்சுமியை பிரதிஷ்டை செய்கிறார்கள், ஆனால் விஷ்ணு கோவில்களில் எந்த சைவ தெய்வத்திற்கும் சிலை இருக்காது, உள்ளே நுழைய முடியாது - மொகலாயர்கள் படையெடுப்பில் ஹிந்து கோவில்களை அழித்து மசூதி ஆக்குகிறார்கள், அவர்களை எதிர்க்க, தப்பிக்க சைவர்களும் வைணவர்களும் சேருகிறார்கள் - ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து கிறிஸ்துவ மதத்தை புகுத்துகிறார்கள், அவர்களை எதிர்க்க வைணவர்கள், சைவர்களும், முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள்... இப்போது, முஸ்லீம் / கிறிஸ்துவ ஆட்சிகள் போயி விட்டன, ஹிந்துக்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள், இப்போது மீண்டும் ஆரம்ப காலத்து சனாதன கதையை சைவர்களிடம் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள் - - - இப்போது இருக்கும் சைவர்களுக்கு, ஹிந்துக்களுக்கு - தலையும் தெரியாது வாலும் தெரியாது, எதோ ஹிந்து மதம் என்றால் சனாதனம்தான் போல, ஹிந்து மதம் என்றால் மகாபாரதம்/ ராமாயணம் கதைகள்தான், வேறு எந்த சாஸ்திரம் இல்லை போல, என்று நம்ப ஆரம்பித்து விட்டார்கள். சைவத்தின் எந்த சாஸ்திரங்களும் புராணங்களும், நூல்களும் ஹிந்துக்களுக்கு தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சாரங்கள். ஆனால் வைணவர்கள் மிக தெளிவாக, வைணவத்தில் சனாதனத்தில் மட்டுமே இருக்கிறார்கள்...


J.Isaac
டிச 13, 2024 09:19

உண்மை,உண்மை, உண்மை


Ramesh Sargam
டிச 12, 2024 20:51

திமுகவினருக்கு எவர் சமம்? என்று உதவாநிதி கேட்டாலும் கேட்பார்.


Barakat Ali
டிச 12, 2024 20:36

அனைத்து மதங்களிலும் சமூக வேறுபாடுகள் உள்ளன ..... கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்பதே பம்மாத்து .......


என்றும் இந்தியன்
டிச 12, 2024 17:37

இந்த வார்த்தையை கேட்டவுடன் திருட்டு திராவிட அறிவிலி அரசுக்கு வத்திக்குச்சி பத்திக்கிச்சி


Mariadoss E
டிச 12, 2024 17:32

அப்படினா எல்லாரும் எல்லா கோயிலுக்கும் போகலாமா சார்.......


J.Isaac
டிச 12, 2024 16:20

பிராமணர்களுக்கு ஆடு, மாடு வளர்த்து பழக்கம் உண்டா?


ஆரூர் ரங்
டிச 12, 2024 17:27

பசுவை தெய்வமாகப் போற்றி வீட்டில் வளர்ப்பது ஆதிகாலத்திலிருந்து பிராமணர் உள்ளிட்ட எல்லா ஹிந்துக்களின் வழக்கம்.


J.Isaac
டிச 13, 2024 09:18

பிராமணர் ஆடு, மாடு வளர்ப்பது, விவசாய வேலை செய்வது, சலவை தொழில் போன்ற இன்னும் அதிகமான வேலைகளை செய்வது கிடையாது. பழைய காலம் போல் தாழ்த்தப்பட்ட இன மக்களை ஆதிக்கம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம்


INDIAN
டிச 12, 2024 15:08

நீங்கள் சொல்வதைப்போல நல்ல கருத்துக்கள் இருக்கும் பொது அதை ஏன் இன்னும் மறைத்து வைத்திருக்கிறீர்கள் , எல்லோரும் அறியச்செய்யுங்கள்


INDIAN
டிச 12, 2024 15:33

என்னுடைய கருத்தை இவ்வளவு அழகாக சுருக்கி பிரசுரித்தமைக்கு நன்றி


Ram
டிச 12, 2024 14:39

ஆய கலைகள் அறுபத்து நான்கு நம் முன்னோர்கள் தோற்றுவித்தது. இந்தியாவில் அனைவரும் கற்றனர். பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து நாம் அனைவரும் கற்கவில்லை.


Riyaz shaikh
டிச 12, 2024 14:37

எனது கருத்து ...


சமீபத்திய செய்தி