உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் கடற்கரையில் மணல் அரிப்பு; ஜன., 17ல் ஹிந்து முன்னணி போராட்டம்

திருச்செந்துார் கடற்கரையில் மணல் அரிப்பு; ஜன., 17ல் ஹிந்து முன்னணி போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கடற்கரையில் 7 அடி ஆழத்திற்கு மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆபத்தான நிலையில் நீராடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணி அமைப்பினர் வரும் 17ல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இக்கோவில் முன் உள்ள கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடிய பின் சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இங்குவரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. திருச்செந்துார் கடற்கரையின் தென்புறம், அமலிநகர் பகுதியில் கடலில் புதிதாக துாண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.ஒரு இடத்தில் அமைக்கப்படும் துாண்டில் வளைவால் அங்கு கடல் அலையின் சீற்றம் குறைக்கப்படும் நிலையில், அதன் அருகில் மற்ற இடங்களில் அலைகள் அதிகமாக எழுந்து மண் அரிப்பை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி, உவரி பகுதிகளிலும், துாத்துக்குடி மாவட்ட கடற்கரைகளிலும் இத்தகைய கடற்கரை மணல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் வழக்கத்துக்கு மாறாக 7 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துாத்துக்குடி தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி அமைப்பினர் ஜன., 17 மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் அமைதியான முறையில் பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜன 15, 2025 07:46

இன்றைய தொழில் நுணுக்கத்தில் இராட்சச கான்க்ரீட்களை உருவாக்கி கரையோரம் போட்டால் மண் அரிப்பு குறையும். அறநிலையத்துறையே கூட அதை செய்யலாம்.


Svs Yaadum oore
ஜன 15, 2025 07:19

இது போன்ற கோவில் அபிவிருத்தி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள், மண் அரிப்பு தடுப்பது போன்றவை விடியல் அரசு சமத்துவம் சகோதரத்துவம் மத சார்பின்மைக்கு எதிரானது .. இப்போது நடக்கும் ஆட்சி காலில் செருப்புடன் சமத்துவ பொங்கல் கொண்டாடும் ஆட்சி நடக்குது ....இங்கே சிரியா பிரச்சனைக்கு சமூக நீதி மத சார்பின்மையாக கவர்னருக்கு எதிராக மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவானுங்க..அதனால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மணல் அரிப்பு பக்தர்கள் ஆபத்தான நிலையில் நீராடுவது பற்றி விடியல் நடவடிக்கை எடுக்கும் என்று கனவு காண வேண்டாம் ....


சமீபத்திய செய்தி