உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்களுடன் தூய்மைப்பணியாளர்கள் நடத்திய பேச்சு தோல்வி

அமைச்சர்களுடன் தூய்மைப்பணியாளர்கள் நடத்திய பேச்சு தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, இனிமேல் முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே போராட்டம் நடக்கும் ரிப்பன் மாளிகையில் இருந்து கலைந்து செல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்., நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து இனிமேல் முதல்வர் தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் மட்டுமே பங்கேற்போம் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, போராட்டம் நடக்கும் பகுதியில் இருந்து கலைந்து செல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என தூய்மைப் பணியாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
ஆக 13, 2025 20:24

ஒரு தூய்மை பணியாளருக்கு மாதம் ஒன்றுக்கு அவுட்சோர்சிங் ஏஜென்சிக்கு சென்னை மாநகராட்சி தருவது ரூ.௩௦ஆயிரம்..இதுநாள் வரை அவர்கள் வாங்கியது தலா 23000... தற்போது புது கம்பெனி வரப்போவது தலா ௧௬௦௦௦...வித்தியாச தொகை திமுக கும்பலின் சுரண்டல்.. அப்புறம் ஏன் போராட மாட்டார்கள்.. மாநகராட்சி நேரடியாக தலா25000ரூபாய் கொடுத்தாலே மாநகராட்சிக்கும் தொழிலாளர்களுக்கும் லாபமே..ஆனால் திருட்டு திராவிட கும்பல் வாய்க்கரிசியை வழித்து தின்பது இயலாது என்பதால் பினாமி கம்பெனி மூலம் சுரண்டல்.....


திகழ்ஓவியன்
ஆக 13, 2025 19:06

இன்று இரவு தீபாவளி தான் , வெளிச்சத்தில் கைது செய்தால் மக்கள் பிரச்சனை இரவு 12 மணிக்கு மேல் கைது செய்து அப்புறப்படுத்தி விடுவார்கள் இல்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு ஆகிவிடுமே


Karthik Madeshwaran
ஆக 13, 2025 18:31

If the demands of the sanitation workers are fair, it is the duty of the DMK government to fulfill them. But sitting in front of the Ribbon Building and obstructing traffic for that purpose is unaccep.


Amsi Ramesh
ஆக 13, 2025 18:27

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் திராவிட மாடல் அரசே


ManiMurugan Murugan
ஆக 13, 2025 18:25

ராயபுரம் எல்லாம் பழைய பகுதிகள் செய்தி தவறுதலாக த் தரப்படுகிறது பாரதி பேசியவற்றைக் கேளுங்கள் மாநகராட்சி பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாள 16009 சம்பளத்திற்கு மாற்றப் படுகிறார்கள் இது அரசாங்க தவறான அனுகு முறை என்று தான் சொல்ல வேண்டும் ஒப்பந்த வேலை செய்பவர் களை வேறு ஒப்பந்தக்காருக்கு மாற்ற அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தானே ஒப்புதல் தர வேண்டும் அதுவும் தமிழகத்தில் யாரும் இல்லை வெளி மாநில ஒப்பந்தம் இதை சட்டசபையில் பேசிய தா அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக தி மு கா கூட்டணி ஒப்பந்த அறிக்கை செய்தி தாள் கெஜெடில் வந்ததா எதுவும் நடைமுறை சரிொயில்லை நீதிமன்றம் தானாக இதை விசாரித்து இருக்க வேண்டும். தூய்மை முக்கியமில்லையா அதை விட்டு அகற்றப்பட்டு வேண்டும் என்பது அவர்கள் என்ன குப்பையா தவறான அனுகுமுறை வழக்கு ஒரு பெண் போட்டது இன்னும் கேவலம் அவர்கள் வீட்டு குப்பை யார் அள்ளுவது முதலில் உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் பழைய தொகுதிகளில் ஒப்பந்தக்காரர் எங்கிருந்து வந்தார் அவ்வளவு ம் திரைகதை வசனம் நாடகம் போடுகிறது தொழிலாளர் திறை அமைச்சர் கிராம த் தன் தானே தீண்டாமை ஒழிந்துவிட்டதா தூய்மை பணியாளர்கள் பணி எவ்வளவு முக்கியம் அறிந்தவர் தானே அவர்களுக்கு ரிய நியாயம் கிடைக்க வேண்டும்


Svs Yaadum oore
ஆக 13, 2025 17:44

ஒப்பந்தம் முடிந்த நிறுவனத்திடம் மாதம் 23,000 ரூ ஊதியம் வாங்கிய தூய்மை பணியாளர்கள் இப்போது புது நிறுவனத்திடம் புதிதாக ஒப்பந்தப்பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனராம் . புதிய ஒப்பந்தத்தின் படி அவர்களின் ஊதியம் மாதம் 16,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாம் ....வருடா வருடம் சம்பளம் ஏற்றுவார்கள் ...திராவிட மாடலில் சம்பளம் குறையுமா ??....இதை கேட்டால் நடு ராத்திரி ஊழியர்களை விடியல் மந்திரி மிரட்டறான் ..


திகழ்ஓவியன்
ஆக 13, 2025 19:07

10 மாதங்கள் வேளாண் சட்டம் பனியில் போராடி 700 பேர் இறந்தார்களே அதை விட கொடுமை உண்டா


Jack
ஆக 13, 2025 21:17

700 பேர் இறந்தார்களே …இலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதை பத்தி ஞாபகம் வராதே அந்த ஆர்டிஸ்டுக்கு


Svs Yaadum oore
ஆக 13, 2025 17:43

பத்து நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சென்னையில் போராட்டம் ...துய்மைபணியாளர்களை வேலை நிரந்தரம் செய்வோம் என விடியல் 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தாரா இல்லையா..??...இதை கேட்டால் நடு ராத்திரி ஊழியர்களை விடியல் மந்திரி மிரட்டறான் ...இப்போது போலீஸ் மிரட்டுது ....


கனோஜ் ஆங்ரே
ஆக 13, 2025 19:11

அய்யா... அறிவுலக மேதை... எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமே... தினமலர் படிப்பதே இல்லையா... ///சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.-/// அப்படீன்னு இன்று பிற்பகல் தினமலர் செய்தி வெளியிட்டிருக்கு... ஆனால், நீ... .இப்போது போலீஸ் மிரட்டுது ....ன்னு சொல்லி இருக்கே...? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உன்ன மாதிரி தற்குறிங்க மதிக்காம இருக்கலாம், ஆனால், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மதிக்கலைன்னா... அப்புறம் நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டு... மன்னிப்பு கேக்கணும்... இது தெரியாம... மாக்கா மாதிரி கமெண்ட் போட்டிருக்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை