துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பதவியேற்பு
சென்னை:தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில், அமைச்சர் அல்லாத தலைவராக, திப்பம்பட்டி ஆறுச்சாமி பதவியேற்றார்.சென்னை அண்ணா சாலையில் உள்ள துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை அலுவலகத்தில், தலைவராக பதவி ஏற்ற பின், அவர் அளித்த பேட்டி:தி.மு.க.,வில், 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, கிளைச்செயலர், ஒன்றிய துணை செயலர், பொதுக்குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்து, இன்று வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். முதல்வர் உத்தரவின்படி, வாரியத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள், 10 லட்சம் பணியாளர்களை உறுப்பினராக சேர்க்க உள்ளேன்.வாரியத்தின் தலைவராக, இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். முதல் முறையாக, அமைச்சர் அல்லாத தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.