உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் பஞ்., தலைவரின் மனைவியை கொன்றவர் சரண் -

முன்னாள் பஞ்., தலைவரின் மனைவியை கொன்றவர் சரண் -

பெ.நா.பாளையம்: கோவை அருகே முன்னாள் பஞ்., தலைவரின் மனைவி கொலையில் டிரைவர் போலீசில் சரணடைந்தார் . கோவை மாவட்டம், துடியலுார் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்டது தாளியூர் கிராமம். இங்கு வசிப்பவர் கவி சரவணக்குமார், 50; செங்கல் உற்பத்தி தொழில் நடத்தி வருகிறார். அ.தி.மு.க., பிரமுகரான இவர் பன்னிமடை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். கோவை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி, 46. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களிடம் டிரைவராக வேலை பார்த்து வருபவர் சுரேஷ், 49. அதே பகுதியில் வசிக்கிறார். நேற்று காலை, 11:30 மணிக்கு மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிரைவர் சுரேஷ் வந்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுரேஷ், அங்கிருந்த கத்தியால் மகேஸ்வரி கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மகேஸ்வரி, அதே இடத்தில் உயிரிழந்தார். தப்பிய சுரேஷ் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். தடாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மகேஸ்வரி குடும்பத்துக்கு நீண்ட காலமாக விஸ்வாசமாக இருந்து வந்ததாகவும், தன்னை சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் சுரேஷ் கூறியுள்ளார். கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை