உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாட்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, 450 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்து சசிகலா சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பது, சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.மத்திய அரசு, 2016ம் ஆண்டு நவ.,8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதன்படி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வாறு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரங்களில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 450 கோடி ரூபாய்க்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்மாதேவி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையை வாங்கியுள்ளார்.அதுவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பிட்ட அந்த சர்க்கரை ஆலை நிறுவன இயக்குனர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 120 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐயின் பெங்களூரு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் இந்த விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் ஜூலை மாதம் வழக்கு பதிந்த சிபிஐ, ஆகஸ்டில் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் சோதனையையும் மேற்கொண்டது. சிபிஐ பதிந்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல விவரங்கள் இடம் பெற்றுள்ளன.2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது, பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சர்க்கரை ஆலையை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ரொக்கமாக ரூ.450 கோடி கொடுத்து, சசிகலா வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆலையின் நிதி விவகாரங்களை கவனித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், ஆலையை விற்கும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் அவரும், அவரது தந்தை சிவகன் படேல், சகோதரர் தினேஷ் படேல் கையெழுத்திட்டுள்ளனர். இந்த விவரங்களை கண்டறிந்த வருமானவரித்துறை சர்க்கரை ஆலையை முடக்கியது. அது பினாமி சொத்து என்றும், சசிகலா தான் ஆதாய உரிமையாளர் என்றும் அறிவித்தது.சிபிஐ பதிந்துள்ள வழக்கில், பத்மாதேவி சுகர்ஸ் நிறுவனம், அதன் இயக்குனர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல், தினேஷ் ஷிவ்கன் பட்டேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டியராஜ், வெங்கட பெருமாள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்றுக் கொண்டது, சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது, பணத்தை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடனாக பணத்தை வழங்கியது, பணமதிப்பிழப்பு அமலில் இருக்கும் போது, சந்தேகத்துக்குரிய வழியில் வந்த பணத்தை ரொக்கமாக வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சர்க்கரை ஆலையை முறைகேடாக வாங்கியதாக கூறப்பட்ட வழக்கு, அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

D Natarajan
செப் 10, 2025 07:42

சசி ஒரு ஊழல் கடல். தோண்ட தோண்ட மிகப் பெரிய பூதங்கள் வெளிவரும். இந்த அம்மணியை மீண்டும் திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும். அடுத்து 20 rs டோக்கன் கொடுத்தவர் மாட்ட வேண்டும்.


Sathya Gold
செப் 08, 2025 08:59

இன்னும் அரசியல்வாதிகள் எத்தனை காலம் ஊழல் செய்ய இடம் அளிக்கும் வகையில் சட்டங்கள் இருக்கும்.. கடுமையான சட்ட திருத்தம் தேவை...


V Venkatachalam
செப் 07, 2025 08:31

இங்கு வரிசை படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் கோர்ட்டுகளை முறை கேடாக பயன்படுத்தியது மற்றும் மிரட்டியது இடம் பெறவில்லை. மேலும் ஜெயலலிதாவை மிரட்டி கடைசி வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் இடம் பெறவில்லை.


Thravisham
செப் 07, 2025 06:29

கட்டுக் குடும்பத்துக்கு சற்றும் சளைத்தல்ல இந்த சசிகலா. மாபெரும் இரும்பு மனுஷியை கையில் போட்டுகொண்டு கொள்ளையடித்தவர். தமிழக திருட்டு த்ரவிஷன்களை பிடித்து உலுக்கினால் இந்தியாவின் அத்தனை கடனையும் நிர்மூக்கமாக்கலாம்


M Ramachandran
செப் 07, 2025 01:17

இது என்னவோ சசிகலாவுக்கு மட்டும் வைய்த்த செக் க்காக தெரிய வில்லை. நான் நான் என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் ஒரு கரும் குண்டு பூனையை மிரட்டுவதர்காக இருக்கும் என்று தோன்று கிறது தேர்தலுக்கு பிறகு பூனை பெரிய கூண்டுக்குள் மாட்டி திரு திரு வேன முழிக்க போகுது. துண்டை காணோம் துணியை காணோன்னு. இருட்டு சந்தில் ஓடி மறைய்ந்து தப்பித்து கொள்ள பார்க்கும். விடியலே வெள்ளைய்ய கொடியுடன் அடிக்கடி டில்லி பயணிக்கும் போது பூனை என்ன செய்ய முடியும். இப்போ ஜால்ராக்களுடன் போடும் ஆட்டம் அப்புறம் டமால்.


pakalavan
செப் 06, 2025 23:49

இந்த வியாபாரம் நடந்தப்ப ஜெயல்லிதா அப்போலோவில். சாக கிடந்துச்சு, ஆயாம்மாவுக்கு இத்தனகோடி சொத்து எப்படி வந்துச்சு ?


R.Madhuri Devi 18RBCO024
செப் 07, 2025 23:15

கள்ளத்தனமா ரயில் ஏறி வந்த வருக்கு எப்படி வந்ததோ அப்படி வந்தது இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல


Amar Akbar Antony
செப் 06, 2025 23:45

சசிக்கலா அவர்களே தயவுசெய்து அரசியலவிட்டு ஒதுங்கி ஓடிவிடுங்கள். நீங்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாவது கிடைக்கட்டும்.


sasikumaren
செப் 06, 2025 23:10

ஊழல் மூலம் பல ஆயிரம் கொள்ளை பணத்தை சம்பாதித்த அந்த கும்பலுக்கு இந்த பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை


s.sivarajan
செப் 06, 2025 22:35

எவ்வளவு பெரிய பொருளாதார முறைகேடுகளையும் சர்வ சாதாரணமாக செய்யக்கூடிய துணிவு நம்நாட்டு சட்டமும் நீதித்துறையும் செயல்படும் போக்கையே காட்டுகிறது


KRISHNAN R
செப் 06, 2025 21:01

இது ஒரு சாம்பிளாக இருக்கலாம்


புதிய வீடியோ