உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தான்குளம் வழக்கு எஸ்.ஐ.,ஜாமின் மனு

சாத்தான்குளம் வழக்கு எஸ்.ஐ.,ஜாமின் மனு

மதுரை : சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. ரகு கணேஷ்,'உடல்நல பாதிப்பிற்கு சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதி தமிழரசி சி.பி.ஐ.,அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ