பத்மநாபசாமி கோயில் விவகாரம்:2 குழுக்கள் அமைப்பு
திருவனந்தபுரம் : பத்மநாபசாமி கோயில் விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட 2 குழுக்களை அமைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லி அருங்காட்சியக இயக்குநர் ஆனந்த் போஸ் தலைமையில் ஒரு குழுவும், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.என் கிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் கடைசி அறையை திறப்பதா, வேண்டாமா என இரு குழுக்களும் முடிவு செய்யும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நகைகளை தரம் பிரிப்பது, அவற்றை வீடியோ எடுப்பது, நகைகளை எவ்வாறு பாதுகாப்பது என பரிந்துரை செய்வது உள்ளிட்ட பணிகளை ஆனந்த் குழு மேற்கொள்ளும் எனவும், ஆனந்த் குழுவின் பணிகளை கிருஷ்ணன் குழு மேற்பார்வையிடும் எனவும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.