உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி பெயரில் திட்டங்கள் அதுவும் மக்களுக்கானதுதான்

கருணாநிதி பெயரில் திட்டங்கள் அதுவும் மக்களுக்கானதுதான்

வரும் 2026ல் ஆட்சியை பிடிக்கலாம் என முன்னாள் முதல்வர் பழனிசாமி காணுவது பகல் கனவு. அவருடன் கூட்டணி போவதற்கு கூட யாரும் தயாராக இல்லை. தனி மரமாக இருக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களும் மக்களுக்கானதுதான். வரும் 2026லும் 'இண்டியா' கூட்டணி தான் வெல்லும். கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி, பழனிசாமி போல பகல் கனவு காணுகிறார். எங்களுடன் கூட்டணியாக யார் சதி வலையிலும் சிக்க மாட்டார்கள். நிச்சயமாக திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார். விஜய் கட்சியை பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை வைத்தே வெற்றி பெறுவோம். விஜய் அ.தி.மு.க.,வை பற்றி விமர்சிக்கவில்லை. காரணம், அக்கட்சி பற்றி பேசும் அளவுக்கான பெரிய கட்சி அல்ல என முடிவெடுத்திருக்கலாம். ரகுபதி, சட்ட அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ