உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ச்சகர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை

அர்ச்சகர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை

சென்னை:தமிழகத்தில் ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு, தலா 10,000 ரூபாய்க்கான கல்வி உதவித்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 500 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு அடையாளமாக, 10 பேருக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். கடந்த ஆண்டு, 400 மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பட்டம் பயிலும் அர்ச்சகர்களின் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை