தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை
சென்னை:சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், 'தமிழ்நாடு நாள்' விழா நடந்தது.இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப்பரிசு மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி, ஆகியவற்றை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.விழாவில், அவர் பேசுகையில், “வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, 3,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. எந்த கோரிக்கையும் இல்லாத நிலையில், அதை இரு மடங்காக உயர்த்த உத்தரவிட்டவர் முதல்வர் ஸ்டாலின்.“அவருக்கு நன்றி. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள்,” என்றார்.