உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்

தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறையில், அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன், ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதில், பதவி உயர்வுடன் இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி, பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா, இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், 8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் யாருக்கும் பதவி உயர்வு தரப்படவில்லை. இதனால், அனைத்து பள்ளிகளிலும், பொறுப்பு தலைமை ஆசிரியர்களே நிர்வாகத்தை கவனிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வும் வழங்கப்படாததால், அரசு உயர்நிலை பள்ளிகளில், 1,500க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 1,212 முதுநிலை ஆசிரியர்களின் பதவி குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. மேல்நிலை பள்ளிகளிலும், 150க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அதேசமயம், பல பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர். உபரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளில் பணி நிரவல் செய்யும் நடைமுறை இருந்தாலும், ஒரே கல்வி மாவட்டத்துக்குள் காலி பணியிடம் இல்லாததால் பணி நிரவலும் தடைபட்டுள்ளது. மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படாததால், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், முதன்மை கல்வி அதிகாரிகள் இல்லாமல், 17 மாவட்டங்களில் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம் தடுமாற்றத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajesh Singh
ஜூலை 08, 2025 11:08

ஆசிரியர் தகுதித் தேர்வு TET என்பது ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும்தான். பதவி உயர்வுகளுக்கு அதை எப்படி அளவுகோலாக வைக்க முடியும்? பதவி உயர்வு தகுதித்தேர்வு என்று ஒன்று வைத்து வேண்டுமானால் தெரிவு செய்யட்டும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் ஆசிரியராக பணி அனுபவம் கொண்டவர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு தகுதித் தேர்வு வைத்து அதில் திறம்பட தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கலாம். அதை விட்டு விட்டு ஆசிரியர் தகுதித் தேர்வை பதவி உயர்வுக்கு அளவுகோலாக வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும்.


S.V.Srinivasan
ஜூலை 08, 2025 10:44

கல்வி மந்திரிக்கு முக்கிய மந்திரிக்கும் துணைவருக்கும் ஜால்ரா அடிக்கவே நேரம் போதவில்லை. தலைமை ஆசிரியர், அதிகாரிகளை நியமிக்க அவருக்கு எங்கே நேரம்? மாணவர்கள் எக்கேடு கேட்டு போனால் அவருக்கென்ன.


Senthamizh Peruman Gopalan
ஜூலை 08, 2025 10:27

அனுபவமற்ற ஆட்களை கல்வி துறைக்கு அமைச்சராக்கினால் கல்வி முன்னேற்றம் தமிழ் நாட்டில் எப்படி இருக்கும். இவரை முதலமைச்சர் வேறு புகழ்கிறார்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2025 12:17

மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படவேண்டிய உண்மை, திமுகவுக்கு கல்வி முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை இல்லை என்பதே .......


subramanian
ஜூலை 07, 2025 07:26

தடுமாற்றம் டாஸ்மாக் குடித்து


SUBBU,MADURAI
ஜூலை 07, 2025 05:43

உதவாநிதியின் ரசிகர் மன்றத் தலைவனை எல்லாம் அமைச்சராக ஆக்கினால் இதுதான் கதி. தமிழகத்தில் கல்வியின் தரத்தை இந்த திராவிட மாடல் அரசு மிகவும் மோசமாக நிலைக்கு கொண்டு போய் விட்டது. இந்த ஆட்சி ஒழிந்தால்தான் தமிழக கல்வியின் தரம் மேம்படும்.


G Mahalingam
ஜூலை 07, 2025 09:12

கல்வி அமைச்சர் வேலையை பார்க்காமல் உதயநிதி மன்றத்தை கவனம் அதிகம் இருப்பதால் இப்படி நடை பெறுகிறது.


சமீபத்திய செய்தி