உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிக்கல்வி கலை திட்டக்குழு அமைப்பு

பள்ளிக்கல்வி கலை திட்டக்குழு அமைப்பு

சென்னை: புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப, பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை தலைவராகவும், செயலரை துணைத் தலைவராகவும் கொண்ட, கலைத்திட்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாடத்திட்டத்தை உருவாக்க, மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில், பல்வேறு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களின் உயரிய பதவிகளை வகித்த, 15 வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பண்பாடு, மொழி, சமூக மரபு உள்ளிட்டவற்றை இணைத்து, சம வாய்ப்பு, சமூக நீதியை உள்ளடக்கிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என, அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை