உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி; ஆசிரியர்கள் மீது வழக்கு

பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி; ஆசிரியர்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சில நாட்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் பெற்றோரை அழைத்து வர அறிவுறுத்தியதாகவும், பெற்றோரை அழைத்து வராததால் கடந்த 6ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவரை ஆசிரியர் தங்கப்பன் அடித்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவரை மீண்டும் ஆசிரியர் தங்கப்பன், தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் ஆகிய இருவரும் அடித்துள்ளனர். மனமடைந்த மாணவர், கடையில் எலி பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மாணவன் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு மாணவனை பார்க்க வந்த தலைமை ஆசிரியரை மாணவனின் தாயார் தாக்கினார். இந்நிலையில் போலீசார், வகுப்பு ஆசிரியர் சீர்காழி திட்டையைச் சேர்ந்த தங்கப்பன், தலைமை ஆசிரியர் மயிலாடுதுறை துர்கா நகரை சேர்ந்த தாமரைச்செல்வன் ஆகிய இருவரும் மாணவனை திட்டி, கையால் அடித்ததாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shankar
நவ 09, 2024 12:15

மாணவர்களை எக்காரணம் கொண்டும் தண்டிக்க கூடாது. அவன் எப்படி படித்தால் நமக்கென்ன தரு தலைகள் உருப்படாத ஜென்மம்


Meena Boopathi
நவ 09, 2024 04:36

Meena Boopathi


Ramesh Sargam
நவ 08, 2024 20:04

பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத மாணவனின் பெற்றோர்கள் அவனை கண்டித்திருக்க வேண்டும்.


Smba
நவ 08, 2024 15:58

பயன் தரு தலையா இருப்பான்


Krishnamurthy Venkatesan
நவ 08, 2024 14:59

நாடு குட்டி சுவராவதை பார்க்க முடியவில்லை. ஆசிரியர்கள் பாவம்.


முக்கிய வீடியோ