உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மை: தமிழக அரசு மீது சீமான் பாய்ச்சல்

எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மை: தமிழக அரசு மீது சீமான் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி, ஒடுக்க முயல்வது வெட்கக்கேடானது' என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப்பணியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க தி.மு.க., அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கவே வழிவகுக்கும்.

பச்சைத்துரோகம்

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அதற்குக் கடுங்கண்டனம் தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தால் பணியாளர்கள் அரசுப்பணியில், பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், தேர்தலில் வென்று முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின் இன்று வரை அதை நிறைவேற்ற மறுத்ததுடன், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதென்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியவர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்.

கொடுங்கோன்மை

போற்றுதற்குரிய பணியாற்றி வந்த மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்களை, குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது திடீரெனப் பணி நீக்கம் செய்ததென்பது அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மையாகும். சமூக நீதி எனப்பேசி அரசியல் செய்யும் தி.மு.க., அரசு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் பணியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி, ஒடுக்கி குரல்வளையை நெரிக்க முயல்வது வெட்கக்கேடானது. இதுதான் தி.மு.க., அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா?

பணிநிரந்தரம்

அனைத்து உள்ளாட்சிகளிலும் தூய்மைப்பணிகளை மீண்டும் அரசே ஏற்று நடத்துவதோடு, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆவடி போலீஸ் கமிஷனருக்கு மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தடையை மீறி குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதற்காக பட்டாபிராம் போலீஸ் ஸ்டேசனில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ள ஆணையம், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை போலீசார் பதிவு செய்யாததால் எஸ்சி எஸ்டி ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Corporate Goons
ஆக 29, 2024 22:49

கூட்டம் கூடும் . ஒரு பிரயோஜனமும் இல்லை


M Ramachandran
ஆக 29, 2024 20:11

நம் வரி பணத்திற்கு வேட்டு வைக்க துணியும் சைதான் மண்


தாமரை மலர்கிறது
ஆக 29, 2024 19:55

எப்போதாவது ஸ்டாலின் ஒரு சில நல்லது செய்வார். அதில் தூய்மை பணியை தனியாரிடம் கொடுத்தது ஒன்று. அதை சீமான் விமர்சிப்பது சரியல்ல. என்னவோ திராவிட ஓட்டுக்களை சீமான் பிரித்து எடுக்க வேண்டும். சீமானிடம் அமித் ஷா கொடுத்த வேலையை சரியாக செய்கிறார்.


gmm
ஆக 29, 2024 17:53

தமிழகம் போன்ற மாநில நிர்வாகம் முழு வருவாயை செலவு செய்து விழுங்கி வருகின்றன. பத்திர பதிவு, மாநில gst … போன்ற வருவாயில் 80 சதவீதம் அந்தந்த மாவட்ட வளர்ச்சிக்கு / உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலில் செல்ல வேண்டும். மீதம் 20 மாநில சிலை, சமாதி, தினமும் ஒரு விழா செலவு செய்வது. உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் மிக குறைவு. பொறுப்பு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊழியர்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும். மக்கள் பொறுப்பில் பிறப்பு இறப்பு செலவுகள். குப்பை அகற்ற தான் உள்ளாட்சி நிர்வாகம்? மாநில அதிகாரம் முறைப்படுத்தாவிட்டால், இனி எதிர்காலம் இருக்காது. ஊராட்சி, நகராட்சி போதும். பெருநகரம் பல நகராட்சி மண்டலமாக பிரிக்க வேண்டும்.


INDIAN Kumar
ஆக 29, 2024 16:59

மத்திய அரசு தனியார் மயமாக்கினால் கூப்பாடு மாநில அரசு செய்தால் மட்டும் நியாமா என்ன சீமானை தவிர யார் எதிர்க்கிறார்கள் மாடல் அரசை .


Kesavan
ஆக 29, 2024 15:30

சரி சரி நீ ஆட்சிக்கு வந்த உடனே எல்லா தூய்மை பணியாளர்களையும் நிரந்தரம் பண்ணி அவர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்கப் பார்


மாடல்
ஆக 29, 2024 15:08

நாளை நமதே 234லும் நமதே. நல்லா என்ஜாய் பண்ணுங்க


Palanisamy Sekar
ஆக 29, 2024 14:55

இதனியெல்லாம் கேட்கவேண்டிய கம்யூனிஸ்டுகள் ஊழல் பணத்தில் பங்குபோட்டு கட்சியின் பெயரில் கட்டிடங்கள் கட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றார்கள். சீமான் கேட்டுவிட்டார். நேரம் காலம் பார்த்து சீமானை கைதுசெய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆட்சிக்கு வந்து மூன்றே வருடங்களில் வாங்கிய கடன் அளவு மூன்றரை லட்சம் கோடி என்கிறது செய்தி. அதனை என்ன செய்தார்கள், எப்படி செலவு செய்தார்கள். இதில் முதலீடு செய்தார்கள், என்கிற விவரங்களை யாராவது கேட்பார்கள் என்று பார்த்தால் இன்னும் அதுபற்றி யாருமே பேசமாட்டேன்கிறார்கள். வெள்ளையறிக்கை கேட்டு போராடனும். விடியா அரசு வந்த நாள் முதல் நாடே குட்டிச்சுவர் ஆகிவிட்டது. யாராச்சும் வங்கிக்கு போனதுண்டா.. நான் பலமுறை போனேன் வங்கிகளுக்கு, ஸ்டாலின் சொன்ன மாதிரி ஒருவரும் கூல்ட்ரிங் கொடுக்கவில்லை.. வாங்க என்று சொல்லி வரவேற்கவில்லை. வங்கி பணியாளரிடம் ஸ்டாலின் சொன்னதை சொல்லி கேட்டேன். ஹஹஹஹா என்று சிரித்தார்கள். அப்போ இந்த தேர்தல் வாக்குறுதியெல்லாம் இப்படித்தான் கோல்மால் கணக்கா? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்குவேன் என்று உறுதிபட சொன்னாரே தேர்தல் வாக்குறுதியில்.. என்னாச்சுண்ணு யாராச்சும் கேளுங்களேன்.


Anbu Raj
ஆக 29, 2024 15:20

சீமானை தவிர்த்து ஒருத்தனும் கேட்கமாட்டான் தமிழ்நாட்டில் எல்லாம் பணப்பெட்டி அரசியல்தான் காரணம் காசு பணம் துட்டு மணி மணி போலி போராளிகள் எல்லோரும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடும் ஈனப்பிறவிகள்


Sridhar
ஆக 29, 2024 14:53

அசிங்கம் பிடிச்ச திருட்டு திராவிட கும்பலை டீசண்டா வேற எதிர்க்கட்சிகள் திட்டினா எடுபடமாட்டேன்குது அதுனால, முள்ள முள்ளால் எடுக்கற மாதிரி, சீமான் மாதிரியான குரூப் மூலம் திட்டினா சரியா மக்களிடம் போய் சேரும். அப்பவாவது புரிஞ்சிகிட்டு மக்கள் திருந்தினா சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை