உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறந்தவர் கணக்கை நாமினிகள் எளிதாக அணுக வசதி செய்கிறது செபி

இறந்தவர் கணக்கை நாமினிகள் எளிதாக அணுக வசதி செய்கிறது செபி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இறந்தவர்களின் கணக்கை, அவர்களால் நியமிக்கப்பட்ட நாமினிகள் எளிதாக அணுக அனுமதிக்க வசதியாக, டிஜிலாக்கருடன் இணைந்து செயல்பட உள்ளதாக பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி தெரிவித்துள்ளது. டிஜிலாக்கர் என்பது பல்வேறு ஆவணங்களை மின்னணு வடிவில் சேமித்து வைக்க உதவுகிறது. இதன்படி, ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை இதில் சேமித்து வைக்க முடியும். மேலும், தற்போது டிஜிலாக்கரில், தங்கள் டிமேட் கணக்கில் இருந்து பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகள் இரண்டிலும் உள்ள தங்கள் இருப்பு அறிக்கையை, சி.ஏ.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையுடன் சேமிக்கலாம்.இதில் ஏற்கனவே, வங்கி கணக்கு அறிக்கைகள், காப்பீட்டு சான்றிதழ்கள் மற்றும் என்.பி.எஸ்., கணக்கு அறிக்கைகளை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஜிலாக்கருடன் இணைந்து செயல்பட உள்ளதாக செபி அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, டிஜிலாக்கரை பயன்படுத்துபவர்கள், தரவு அணுகலுக்கு வசதியாக நாமினிகளை, அதாவது வாரிசுதாரர்களை நியமிக்கலாம்.இதன் காரணமாக, பயனரின் மறைவு ஏற்பட்டால், அவர் நியமித்த நாமினிகளுக்கு டிஜிலாக்கர் கணக்கை படிக்க மட்டும் அனுமதி வழங்கப்படும். இது, அத்தியாவசிய நிதி தகவல்களை சட்டபூர்வ வாரிசுகள் எளிதாக அணுக வசதி செய்கிறது. இதன் காரணமாக, அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சொத்துக்களின் அளவை குறைக்க முடியும் என, செபி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

अप्पावी
மார் 21, 2025 07:25

இவிங்கி கிட்டேருந்து நாமதான் நாமினின்னு நிரூபிக்கிறதுக்குள்ளே தாவு தீந்துரும். நானே இன்னும் சாகலை. ஆனா என்னிட பங்குகளை பெறுவதற்கு iepf நிறுவனத்துக்குப் போனா எனக்கே இறப்பு சான்றிதழ் கேக்கும் ஐ.ஏ.எஸ் தத்திகள் இருக்காங்க. நாம சாவுறதுக்குள்ளே பங்குகளை நஷ்டத்திலாவது வித்து நம் குடும்பத்தாருக்கு குடுத்திரணும். இவுனுங்களை நம்புனா அவ்ளோதான்.