உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 6வது நாளாக இன்றும் (டிசம்பர் 31) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றும் 6வது நாளாக போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, இடைநிலை ஆசிரியர்களை, ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக தயாரித்து, அதில், 'கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே' என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளனர். அதை கையில் ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaja
டிச 31, 2025 14:05

அவர்கள் கேட்பது சமவேலைக்கு சம ஊதியம் ஒரே பள்ளியில் ஒரே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இருவேறு ஊதியம் என்ன எதற்கு போராடுகிறார்கள் என்று பார்த்து உங்கள் கருத்தை பதிவு செய்க தோழரே ..


முருகன்
டிச 31, 2025 14:56

தனியார் ஆசிரியர் சம்பளம் எவ்வளவு தெரியுமா அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்


பெரிய குத்தூசி
டிச 31, 2025 12:49

திமுக அரசின் முழு ஆதரவை பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோஜியோ மற்றும் திமுக அரசின் செட்டப் செய்யப்பட்ட மத்திய உளவுத்துறையை ஏமாற்ற திசைதிருப்ப நடத்தப்படும் போராட்ட நாடகம் இது. ஜாக்டோஜியோ ம் திமுக அரசும் நகமும் சதை போன்றது. இந்த போராட்டம் மூலம் சண்டை போட்டுக்கொள்வது போன்ற இந்த பொய்யான பிம்பத்தை கட்டமைக்கும் போராட்டங்களை மக்கள் நம்ப வேண்டாம். தமிழ்நாடு அரசின் ஊழியர் சங்கமான ஜாக்டோஜியோ ஊழியர்கல் வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஒவொரு பூத் வாக்கு அதிகாரிகளாக இருப்பார்கள். தேர்தலின் பொது திமுகவின் பலமே தமிழ்நாடு அரசின் ஊழியர் சங்கமான ஜாக்டோஜியோ அரசு ஊழியர்கள்தான். ஜாக்டோஜியோ சங்க அரசு ஊழியர்கள் அனைவருமே திமுக கட்சியை சேர்ந்தவர்கள். தேர்தல் நாளன்று பூத் அதிகாரிகளாக இருக்கும் தமிழ்நாடு அரசின் ஊழியர் சங்கமான ஜாக்டோஜியோ ஊழியர்களை வைத்து வாக்கு செலுத்தாத நபர்களின் வாக்குகளை பூத் தேர்தல் அதிகாரிகளே டிக் செய்து பூத் ஏஜென்ட் கலை லோக்கல் திமுக தலைவர்கள் மூலம் காசு கொடுத்து கையில் போட்டுகொண்டு பூத் வாக்காளர் எண்ணிக்கைக்கு மற்றும் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் 100 முதல் - 500 ஓட்டுக்களை பிரஸ் செய்து கள்ள ஒட்டு போட்டுவிடுவார்கள். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கும் இதுபோன்ற மெகா திட்டங்கள் திமுக IT விங் தயாராக வைத்துள்ளது. இப்போது மத்திய அரசு IB உளவு அமைப்பு ஜாக்டோஜியோ அமைப்பை தீவிரமாக கண்காணிக்க துவக்கியுள்ளது. ஆதலால் ஜாக்டோஜியோ வுக்கும் திமுக அரசுக்கும் கருது வேறுபாடு உள்ளது போல் காண்பிக்க போராட்ட நாடகம் செயல்படுத்தப்படுகிறது.


Rajarajan
டிச 31, 2025 12:48

மொதல்ல உங்க வாரிசுகள், எந்த அரசு பள்ளிகளில் படிக்கறாங்கனு மொத்த பேரோட லிஸ்ட் கொடுங்க. அப்புறம், நீங்க எத்தனை பேர், தனியார் ஆட்டோ, டாக்ஸி, மருத்துவ சேவை, தேநீர் கடை/சிற்றுண்டி கடை / உணவு நிலையங்கள்ல சாப்பிடறீங்க. தனியார் பேருந்தில் பயணிக்கிறீங்க. தனியார் கடைகளில் பொருள் வாங்கறிங்க. தனியார் விவசாயிகள் உற்பத்தி செய்யற உணவு பொருள்களை உபயோகம் பண்றீங்கணும் விலாவாரியா லிஸ்ட் தாங்க. அதுல எடுத்து பாருங்க. எல்லாம் தனியார் தான். அவங்களுக்கு எல்லாம் எந்த அரசு துறை சம்பளம் தருதுனு கேளுங்க. அவங்க எப்படி வாழ்வாதாரத்தோட வாழறாங்கனு கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.


venkatarengan.
டிச 31, 2025 12:44

அரசு ஊழியர்கள் தமிழக அரசு மேல் தான் கோபத்தில் உள்ளனர். தி.மு.க விடம் அவர்கள் அனுதாபம் தான் வைத்துள்ளனர். திமுக விற்கும் இவர்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவது என்பது நன்கு தெரியும்.


MUTHU
டிச 31, 2025 13:36

அரசுஊழியர்கள் காவல்துறையினர் வாத்தியார்கள் பஸ் ஊழியர்கள் மற்றும் இவர்களின் குடும்பம் சார்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் திமுக தாண்டி சிந்திக்க தெரியாது என்பது தான் உண்மை. எவன் குடும்பம் எப்படி போனால் என்ன. ஏன் எனில் இந்த கட்சி தான் இவர்களின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் செல்வார்கள். கேள்வி கேட்க மாட்டார்கள். இவர்கள் செய்யும் ஊழலை அனுமதிப்பவர்கள் .


Arul
டிச 31, 2025 12:19

இன்னுமா இந்த உலகம் நம்ம நம்புது ....


JaiRam
டிச 31, 2025 12:14

இவனுங்களுக்கு புத்தி வராது தேர்தலில் இந்த தருதலைகள் திருட்டு திராவிட கூட்டத்திற்கு ஒட்டு போடுவார்கள்


athiban
டிச 31, 2025 20:32

தமிழகத்தில் பெரும்பாலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சிதான் நடந்துள்ளது. இதில் தி.மு.க., ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாமல் வேற யாருக்கு ஓட்டு போடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை