உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்

 ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொரியல் எல்லாம்; தேர்தலில் கூட்டு என்பதே இல்லை,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட் டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான களமே அரசியல். அதனால்தான், சட்டசபை தேர்தலில், சரிபாதியாக 117 இடங்களை, பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வழங்குகிறது. போட்டியிட, தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என வருத்தம் இருக்கலாம். களத்தில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மை சமூகத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். கொடுக்காமல் விட்டால், விமர்சனங்கள் எழும். புறக்கணிக்கப்பட்ட சமூகங்களும் உள்ளன. அவர்களுக்கும், நாம் வாய்ப்பு வழங்குகிறோம். ஜாதி, நிறம், மதம் பார்த்து, யாரும் ஓட்டு போடக் கூடாது. ஜாதியாக நின்று, இங்கு யாரும் வென்றதில்லை. எந்த சமூகத்துடன், மற்ற சமூகம் இணைகிறதோ, அப்போதுதான் வெற்றி கிடைக்கும். மக்களுக்கு நம் அரசியல் புரியும்போது, நம்மை கொண்டாடுவர். எனவே, நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை புறம் தள்ளுங்கள். சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும், வரும் பிப்., 21ல் திருச்சியில் நடக் கும் மாநாட்டில் அறிவிப்போம். அனைவரும் இளைஞர்கள்தான். தேர்தலில் சமரசம் இல்லை. தேர்தல் கூட்டணி கிடையாது; சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொரியல் எல்லாம். சண்டை எல்லாம் தனித்து தான் போடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

nagendhiran
டிச 22, 2025 19:50

மொழி மற்றும் இனம் வைத்து மட்டும் வாக்கு கேட்களாமா


kulanthai kannan
டிச 22, 2025 19:24

ஜாதி, நிறம், மதத்தோடு மொழியையும் சேர்க்கத் தயாரா?


KAMALANATHAN MANICKAM
டிச 22, 2025 17:36

ஐரோப்பாவில் மொழி வழியாக பிரித்ததனால் தான் இத்தனை நாடுகள். எனவே மொழி தான் நம் அடையாளம். வாழ்க தமிழ் .


Rameshmoorthy
டிச 22, 2025 17:05

Vandhery talks


Dharani Manogaran
டிச 22, 2025 14:34

ஆம் மொழி , இனம் பார்த்துதான் ஒட்டு போடவேண்டும்.


SUBRAMANIAN P
டிச 22, 2025 13:30

எத்தனைக் காலத்துக்குத்தான் இப்படியே பேசிகிட்டு இருக்கபோரும்வே


Madras Madra
டிச 22, 2025 11:04

இதை நீ ஜோசப் விஜய் வந்த பிறகு தான் கூவுற பயந்துட்டியா ?


V RAMASWAMY
டிச 22, 2025 11:01

சனாதன தர்ம முறையில் ஈடுபாடுடைய அனைவரும் அதனை வெறுக்கும் இழிவுபடுத்தும் கட்சியைத் தவிர்த்து, கல்வி தகுதி, திறன், முதலியவை கருத்தில் கொண்டு வாக்களித்து, மக்கள் பணத்தை சுரண்டாத கட்சிக்கும் வாக்காளர்களுக்கு நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கி நல்லாட்சி வழங்கக்கூடிய கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.


Barakat Ali
டிச 22, 2025 11:01

மொழி ????


Barakat Ali
டிச 22, 2025 11:00

இனம் பார்த்து வாக்களிக்கலாமா ????


முக்கிய வீடியோ