உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளி, கல்லுாரிகள்: வெட்கக்கேடு என்கிறார் சீமான்

அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளி, கல்லுாரிகள்: வெட்கக்கேடு என்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக் கேடானது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் மாணவ-மாணவியரின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் கூட முறையாக இல்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.குறிப்பாக, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி முறையாக இல்லை என்பதால் அங்கு பயில்கின்ற ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தூய்மையற்ற கழிவறைகளும், பராமரிப்பற்ற குடிநீர்த் தொட்டியையும் பயன்படுத்துவதால் மாணவர்களுக்குத் தொற்று நோய்கள் பரவி, அடிக்கடி உடல்நல சீர்கேடும் ஏற்படுகின்றது. தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு அங்கு பயிலும் மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தியுள்ளனர்.இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு, தங்களால்தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான முறையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது. ஆகவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் அடிப்படைத்தேவையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதியை உடனடியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கழிவறை மற்றும் தூய குடிநீர் ஏற்படுத்தித் தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் நாம் தமிழர் கட்சி விரைவில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
ஏப் 03, 2025 03:59

இவ்வளவு நாள் வெட்கக்கேடு இல்லையா என்று கேட்டால் அவன் சங்கி..


Murthy
ஏப் 02, 2025 23:19

எல்லா வசதிகளும் செய்து கொடுத்துவிட்டால் எப்படி திமுக காரர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மக்கள் போவார்கள் ??


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 02, 2025 21:26

உம்மைப்போன்றவர்கள் இருக்கும் வரை திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளை அசைக்க முடியாது


மதிவதனன்
ஏப் 02, 2025 21:16

ஒன்றியத்தில் இருந்து படிப்போருக்கு வரவேண்டிய நிதி கொடுக்க மாட்டேங்கிறான் அதை கேட்க துப்பில்லை இவருக்கு , சரி திரள் நிதியில் கொஞ்ச ஒதுக்கி இதை சரி செய்யலாமே


vivek
ஏப் 02, 2025 21:37

எல்லாத்துக்கும் ஒன்றியம் கிட்ட பிச்சை எடுப்பீங்களா...சொந்த காசு இல்லையா


அப்புசாமி
ஏப் 02, 2025 20:45

ஆமாம். ஏதாவது கட்டணம் கேட்டால் ஒரு பய தர மாட்டான். எல்லாம் ஓசில குடுக்கணும். அவிங்க ஆட்டையப் போட்டது போன மிச்சத் தொகையில் இந்த வசதியே அதிகம். வசதி இருக்கறவங்க தனியார் பள்ளி, கான்வெண்ட்டில் படியுங்க.நான் விழுப்புரத்தில் காந்தி பள்ளியில் படித்த போதுஒரு அம்மா ஜீ அங்கேயே கான்வெண்ட்டில் படிச்சு இன்னிக்கி பெரிய ஆளாயிருக்காங்க.


Ramesh Sargam
ஏப் 02, 2025 20:20

திமுகவின் எதிரிகள் என்னதான் திமுக அரசின் அவலங்களை புட்டுபுட்டு வைத்தாலும் திமுக கண்டுகொள்ளாது. ஏன் என்றால் திமுகவினருக்கு தெரியும் தேர்தல் நேரத்தில் எப்படி மக்களை கவரவேண்டும் என்று. ஆம் சரக்கு, ரூ, 200, மற்றும் பல இலவசங்களை கொடுத்து மக்களிடம் வாக்கு பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வார்கள். மக்கள் மாறவேண்டும். மக்கள் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.


Venkateswaran Rajaram
ஏப் 02, 2025 19:55

இந்த இரண்டு திருட்டு திராவிடர்கள் சகல வசதிகளுடன் உலக தரத்தில் அமைத்துள்ள ஒரே திட்டம் மெரினாவில் உள்ள சமாதி சின்னங்கள் தான் ... மக்களுக்கு எள்ளளவு கூட பயன்படாதவை அதுவும் மக்கள் வரிப்பணத்தில் ...