உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்க்கு உதவி செய்யும் எண்ணம்; சீமான் பாராட்டு

விஜய்க்கு உதவி செய்யும் எண்ணம்; சீமான் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'விஜயால் களத்தில் நிற்க முடியவில்லை. அவருக்கு உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.திருப்பூரில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விஜயால் களத்தில் நிற்க முடியவில்லை. பிரச்னை இருக்கிறது. அவர் போய் களத்தில் இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க அதிகமான கூட்டம் வந்துவிடும். பிறகு அந்த பிரச்னையை சமாளிக்க வேண்டும். விஜயால் களத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம். உதயநிதி பிறந்த நாள் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இதில் அமைச்சர்கள் எல்லாம் பாராட்டி பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் மக்களை வர வைத்து வேஷ்டி, சட்டை, அரிசி, பருப்பு கொடுக்கிறார். இந்த எண்ணத்தை பாராட்ட வேண்டும். பேரிடர் காலங்களில் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை.மாநில அரசுகள் கொடுக்கும் நிதி தான் மத்திய அரசுக்கு வருவாய். முதல் இடத்தில் மஹாராஷ்டிரா, இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஏன் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி கொடுக்க மறுக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கைகள் மழைநீரில் ஆழமாக மூழ்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ராமகிருஷ்ணன்
டிச 05, 2024 06:27

நேத்து கட்சி ஆரம்பித்தவன் புயலுக்கு உதவிகள் செய்கிறான். நீயோ, உன் தும்பிகளோ பிச்சை எடுத்து வசூல் பண்ணி நீங்களே முழுங்கி விடுகின்றீர்கள். அதானால் தான் உன் கட்சி ஆட்கள் தெரித்து ஓடுகிறார்கள்


VENKATASUBRAMANIAN
டிச 04, 2024 18:47

கொடுத்த நிதிக்கு கணக்கு கொடுப்பதில்லை.கொடுத்த நிதியை பயன் படுத்துவதில்லை. பட்டியல் இன மதத்தினர் மேம்பாட்டு நிதியை பயன் படுத்தாமல் திருப்பி அனுப்பியது. இதுதான் இவர்களின் சமூகநீதி. இது விடியா அரசு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


ராமகிருஷ்ணன்
டிச 04, 2024 16:21

தமிழகத்திற்கு கொடுக்கப்படும் நிதிக்கு சரியான செலவு கணக்குகளை தமிழக அரசு தருவதில்லை. திமுகவினர் அள்ளி அள்ளி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறார்கள். மத்திய அரசு வங்கிகள் மூலம் மட்டுமே மக்களுக்கு உதவிகள் செய்யனும். திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி விடக்கூடாது.


joe
டிச 04, 2024 15:56

அரசியல் வாசனை முழுவதும் தெரியாமல் சீமான் தன்னுடைய உழைப்பை வீணடிக்கிறார் .சீமானுக்கும் மக்களை நல்ல பாதையில் கொண்டு செல்ல விருப்பப்படுகிறார் .ஆனால் முழு அரசியல் வாசனையும் தெரியாமல் குழம்புகிறார் .சீமானுக்கு மக்கள் மதிப்பளிக்கலாம் .நல்ல மக்களாட்சியை அவரால் கொடுக்கமுடியும் .


கந்தசாமி,மதகுபட்டி
டிச 04, 2024 17:17

இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற? உழைப்பு பாதை வாசனை குழம்புன்னு எதையோ உளறிக்கிட்டு கெடக்க நீ யாரு ஒருவேளை சீமானின் திரள்நிதி தம்பியா.


Anantharaman Srinivasan
டிச 04, 2024 20:40

வெறும் உருட்டல் பேர்வழி. நாட்டையாள தகுதியற்றவன்.


சம்பா
டிச 04, 2024 15:37

அரை கிருக்கன்


Pandianpillai Pandi
டிச 04, 2024 14:39

கரிகால சோழன் தடுப்பணை கட்ட ஆழத்தில் கற்களை அடுக்கி அடுக்கித்தான் அணை கட்டினார். அவரை இன்றளவும் மக்கள் நினைவில் வைத்து போற்றுகின்றனர். மாண்புமிகு முதலமைச்சரின் நடவடிக்கைகள் அவ்வாறுதான் திட்டங்கள் கற்களை போன்று மூழ்கி இருப்பது போல் தான் தெரியும் முழுமையடையும் போது ஒட்டு மொத்த நாடே அவரை கொண்டாடும். இந்த மழையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இதை பார்க்கும்போது தற்போது தண்ணீர் தேங்கும் இடங்களும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


karupanasamy
டிச 04, 2024 15:58

அடியேய் விபத்து ஏதும் நடந்துடக்கூடாதுன்னு பல்லு பூராத்தையும் புடுங்கிட்டியா.


Mettai* Tamil
டிச 04, 2024 16:27

கரிகால சோழன் தடுப்பணை கட்ட ஆழத்தில் கற்களை அடுக்கி அடுக்கி அணை கட்டியதை போல, 60 வருஷ திராவிட ஆட்சியில் ஒவ்வொரு வருசமும் வெள்ள நிவாரண நிதியை கஷ்டப்பட்டு வாங்கி செய்த ஆழமான நடவடிக்கைகள் , திட்டங்கள் கற்களை போன்று மூழ்கி இருப்பது போல் தான் தெரியும். 61 வது வருஷம் முழுமையடையும் போது ஒட்டு மொத்த நாடே அவரை கொண்டாடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்கியிருப்பது தண்ணீர் இல்லை .அது வெறும் கானல் நீர். இதை பார்க்கும்போது தற்போது கானல் நீர் தேங்கும் இடங்களும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.....


Paramasivam
டிச 04, 2024 16:39

தாங்கள் நிருபர் வேலைக்கு 100% பொருத்தமானவர் தான்.


Sakthi,sivagangai
டிச 04, 2024 17:29

யோவ் நீ நல்லாத்தானய்யா இருந்த எப்பயிருந்து இப்படி? அடப் பாவமே எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்குன்னே தெரிய மாட்டேங்குது.


ghee
டிச 05, 2024 08:41

இவரும் gazetted officer போல.....


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 14:39

விஜய் மாநாட்டுக்கு முன், கூப்பிட்டால் போவேன் என்றார் . அவர் கூப்பிடவில்லை உடனே, அவரோட கட்சி மாநாடு, நான் எப்படி போவது என்றார். முதல் நாள் தம்பி என்றார். கட் அவுட் வரைந்து கொடுத்தேன் என்றார் . அடுத்த நாள் லாரி அடிச்சு செத்துடுவே என்றான். அடுத்த நாள் ஆயிரம் இருந்தாலும் தம்பி என்றார். அதுக்கு அடுத்த நாள் தம்பி ன்னாலும் எதிரி எதிரி தான் என்றார். இப்ப மீண்டும் விஜய் க்கு காவடி எடுக்கிறார். இவர் பின்னால் போகிறவர்கள் தான் பாவம்.


Gopal,Sendurai
டிச 04, 2024 17:33

யார் காவடி எடுத்தா நமக்கு என்ன நாம வழக்கம் போல திமுகவுக்கு முட்டுக் கொடுக்கிற வேலைய பாப்போம்.


வீரா
டிச 04, 2024 21:27

நம்புங்கள் நான் gazetted officer....ஆனால் முட்டு கொடுப்பேன்


சமீபத்திய செய்தி