உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்கிட்ட ஆட்சியைக் கொடுங்க... தண்ணீர் தேங்கினால் ஆட்சியை விட்டு போயிடுறேன்; சீமான்

என்கிட்ட ஆட்சியைக் கொடுங்க... தண்ணீர் தேங்கினால் ஆட்சியை விட்டு போயிடுறேன்; சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் கழிவுநீர், மழைநீர் கலந்து ஓடுவதை தடுக்க கால்வாய் வெட்ட துப்பில்லாத தமிழக அரசு, மெட்ரோ திட்டத்திற்காக மட்டும் குழி தோண்டுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மதுரையில் இருந்து நேற்று தான் வந்தேன். சாலையில் போய் பாக்கறீங்களா? எங்குமே சாலை கிடையாது, எல்லாம் சவக்குழிகள். கடந்த 60 ஆண்டுகளாக இந்த நிலத்தை ஆண்டது தி.மு.க., அ.தி.மு.க., தான். சென்னையில் மழைநீர் வடிந்து வெளியேறுவதற்கு ரூ.2,500 கோடி தான் தேவை என்கிறார்கள். எத்தனை ஆயிரம் கோடிகள் ஒதுக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? இவங்க வந்தே (தி.மு.க.,) ரூ.4,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு ரூ.2,000 கோடியில் தலைநகரிலேயே மழை நீர் அழகா வெளியேறுது. நீங்க எத்தனை நாடுகளுகளுக்கு அந்நிய முதலீட்டை கொண்டுவர பயணிக்கிறீர்கள்? சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் மழையே பெய்வது இல்லையா? மழை பெய்கிறது. ஆனால், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், மக்கள் வாழும் இடங்களில் வெள்ளம் புகாமல், அதனை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதை பார்க்கிறீர்கள் தானே?எத்தனை ஆண்டுகளுக்கு இந்த கொடுமை. வெள்ளத்தில் மிதந்தானா? வீடு இடிந்து விட்டதா? ஒரு ஐந்தாயிரம் கொடுத்து விடு என்பது எல்லாம் ஒரு ஆட்சி முறையா? ஒரு தீர்வு முறையா? சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.2,500 கோடி ஒதுக்கி நடவடிக்கை எடுத்தாலே போதும் என்று அதிகாரிகளே சொல்கிறார்கள். இது ஒரு சாதாரண அடிப்படை கட்டமைப்பு. கழிவுநீர், மழைநீர் கலந்து ஓடுவதை தடுக்க கால்வாய் வெட்ட துப்பில்ல, நீ எதுக்கு மெட்ரோ போடுற. நான் கேட்டனா உன்கிட்ட. நீர் ஓடுவதற்கு கால்வாய் வெட்டுணு சொன்னா, நீ கார் ஓட, ரயில் ஓட கால்வாய் வெட்டிட்டு இருக்க.மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் எத்தனை சதவீதம்ணு சொல்லுங்க. எல்லார் வீட்டிலையும் கார் இருக்கு, அதுபோக அரசுப் போக்குவரத்து இருக்கு. ஆட்டோ இருக்கு, பைக் டாக்சி இருக்கு. அப்படியிருக்கும் போது இந்த மெட்ரோவில் எத்தனை பேர் போவாங்க. இதுவரை ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கீங்க. சென்னையில் தண்ணீர் வழிந்தோட ரூ.2,500 கோடி ஒதுக்க மாட்டீங்களா?குளங்களை ஆக்கிரமிக்கும் வீடுகளை இடிக்கும் நீ, பள்ளிக்கரணை ஏரி குப்பையைக் கொட்டி ஆக்கிரமிச்சிருக்க. உன்னை என்ன பண்ணலாம். மூளை இருக்கிறவன் பள்ளிக்கரணை ஏரியை குப்பையை கொட்டி மூடுவானா? யாருமே உங்களை கேள்வி கேட்கக் கூடாதா? மக்கள் ஆக்கிரமிப்பு என இடிக்கும் நீ, ஆக்கிரமிக்கும் போது கோமாவில் படுத்து இருந்தயா? ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டு அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு எல்லாம் கொடுத்தது யார்? அரசு தானே. 60 ஆண்டு காலம் கழித்து தான் ஆக்கிரமிப்பு என்று தெரியுதா? சென்னை என்பது நீர்த்தேக்கம். ஏரியில் கட்டப்பட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்க உத்தரவிடும் கோர்ட்டே ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது. நான் கூட வழக்கு போட உள்ளேன். இந்த கோர்ட்டே ஏரியை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டிருக்கு, இடிங்கணு. மதுரையில் இருக்கும் ஐகோர்ட் கிளையும் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது. என்னைப் போல போராட முடியல. அதனால் தான் தண்ணீர் வீட்டுக்குள்ள போயி, வெளிய போங்கடா என்கிறது. வீரநாராயண ஏரி 16 கி.மீ., தூரம் கொண்டது. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு 16 கி.மீ., தான். அப்போ மினி கடலே வெட்டி வச்சிருக்கான். அதனை தூர் வாரியிருந்தால், கடலூர் ஏன் வெள்ளத்தில் மிதக்குது. தொலைநோக்கு பார்வையே இல்ல.தம்பி உதயநிதியே பதிவு போடுறாரு, ஆண்டுதோறும் இதே பிரச்னை (சென்னை வெள்ளம்), இந்தப் பிரச்னையை ஒழிக்க முடியாதா என்று. உங்களை ஒழித்தால் மட்டும்தான் முடியும். வேறு எப்படி ஒழிக்க முடியும். ஒரு ஐந்தாண்டு ஆட்சியைக் கொடுங்க. நீர் தேங்கினால், ஆட்சியை விட்டு போயிடுறேன், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

மோகன்
டிச 16, 2024 21:29

தயவுசெய்து பகடி செய்வதை நிறுத்துங்கள். சொடக்கு போடும் நேரத்தில் எதுவும் நடந்து விடாது. தமிழ்நாட்டில் அண்ணாமலை போல் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சில வருடங்களில் நல்ல பெரிய மாற்றங்கள் வரும். காத்திருப்போம்.


vee srikanth
டிச 16, 2024 18:33

ஈழ தமிழர் ஒருவர் சமீபமாக கதறி அழுதார் - 34 வருடமாக மண்டபம் முகாமில் தங்கி இருந்ததாகவும் - தனக்கு எவ்விதமாக அடையாள அட்டை எதுவும் தரவில்லை எனும் - இலங்கை செல்ல அனுமதிக்கும் படியும் - தன்னை காவல் அடிக்கடி கைது செய்ததாகவும் - எங்கே போனார்கள் - வைகோ / திருமா /சுப / கருப்பு சட்டை காரர்கள் ????


Narayanan
டிச 16, 2024 15:32

இப்போ கட்சி நடத்துகிறேன் பேர்வழி என்று சொந்த கட்சி உறுப்பினர்களிடம் மாதம் 1000 ரூபாய் கொள்ளை அடிக்கும் இவரிடம் ஆட்சி போனால் தமிழ்நாட்டை விற்றுவிடுவார். அப்போ இவர் என்ன சொல்லுவார், கடந்த 60 ஆண்டு கால ஆட்சியின் தவறுகளுக்கு 5 ஆண்டுகளில் என்னால் எப்படி உடனே சரி செய்யமுடியும் என்பார் . நாம் பார்த்த அரசியல் வாதிகளின் பதில் இப்படித்தான் வரும் .


venugopal s
டிச 16, 2024 13:07

குரங்கு கையில் பூமாலையை தமிழக மக்கள் கொடுக்க மாட்டார்கள்!


Sampath Kumar
டிச 16, 2024 09:38

ஏந்த தண்ணியை சொல்லுறாரு ஓ அதைய அப்படினா இவரை காலி பண்ணிடுவாரு


T.sthivinayagam
டிச 15, 2024 23:58

இந்த ஸ்கிரிப்ட் நல்லா இருக்கே யார் எழுதியது...


Santhakumar Srinivasalu
டிச 15, 2024 21:25

இவர் வேற தனியா வந்து வெட்டி பந்தா உடறார?


vbs manian
டிச 15, 2024 21:24

பளீர் என்று சாட்டையடி.


Krishnamurthy Venkatesan
டிச 15, 2024 21:16

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம், நீட் தேர்வை ரத்து செய்வோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவோம் என்று சொன்னார்களே.


sundar
டிச 15, 2024 19:59

இருக்குற பிரச்சனையில் இவர் வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை