உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி உதவித்தொகை பெற தேர்வு

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி உதவித்தொகை பெற தேர்வு

கள்ளக்குறிச்சி: ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த சிறப்பு கல்வி உதவித் தொகை தேர்வில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் சிறப்பு கல்வி உதவித் தொகைக்கான தேர்வு நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். வினாக்கள் ஒரு மதிப்பெண் அடிப்படையில் கேட்கப்பட்டன.பள்ளி முதல்வர் நான்சி மாதுளா, பள்ளியின் பல்வேறு பாடதிட்டங்கள், போட்டித்தேர்வு பயிற்சி முறைகள், வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.பின்னர், மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் 'ஏசி' எல்.சி.டி., அரங்கம், நீச்சல் குளம், உள்ளரங்கு விளையாட்டுக்கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக ஜாலி பஸ் பயணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தேர்வு முடிவுகள் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும். இச்சிறப்பு கல்வி உதவித்தொகை தேர்வு, மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது என பெற்றோர் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை