உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரை குஷிப்படுத்த செல்வப்பெருந்தகை ஜால்ரா

முதல்வரை குஷிப்படுத்த செல்வப்பெருந்தகை ஜால்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''ஜாதி மறுப்பு திருமண கொலைகள் நடக்கவில்லை; சட்டம் - ஒழுங்கு சீர்குலையவில்லை. சொந்த காரணத்திற்காக வீட்டுக்குள் நடக்கும் கொலைகளை எப்படி தடுக்க முடியும்,'' என, கேட்கிறார் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை.சமீபத்தில், சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, 'காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. நாம் எவ்வளவு காலம் சார்ந்து இருப்பது; சுயமாக நிற்க வேண்டும்' என, மறைமுகமாக தி.மு.க., கூட்டணியை விமர்சித்தார்.அவரை தொடர்ந்து பேசிய அவரது ஆதரவாளர்கள், 'உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் காங்., தனித்துப் போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தியதால், தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சை பேச்சை கண்டித்த, காங்கிரஸ் மேலிடம், தி.மு.க., கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என எச்சரித்தது.அதையடுத்து, கோவையில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடையும் வகையில், தி.மு.க., அரசை வெகுவாக புகழ்ந்து தள்ளினார். இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கக்கன் பிறந்த நாள் விழா நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி குணசேகரன், அந்த விழாவில் காங்கிரசில் இணைந்தார்.பின், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சொந்த பிரச்னைகளான சொத்து தகராறு, காதல் விவகாரத்தில் நடக்கும் கொலைகளை, எப்படி சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என, சொல்ல முடியும்? இதை காவல் துறையும், முதல்வர் ஸ்டாலினும் எப்படி தடுக்க முடியும்?ஜாதி மறுப்பு திருமண கொலைகள் எதுவும் நடக்கவில்லை. இரு வன்முறை கும்பல்கள் மோதிக்கொள்வதை தான் தடுக்க வேண்டும். வீட்டுக்குள் நடக்கும் கொலைகளை எப்படி தடுக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kannan
ஜூன் 20, 2024 21:26

இப்போ கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயத்தால் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்து கனிமொழியின் கனிமொழி அவர்களின் கனவான விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே...அதைப்பற்றியும் திமுக அரசை புகழ்ந்து ஏதாவது சொல்லுங்களேன்...please


Krishna Kumar
ஜூன் 20, 2024 10:35

செல்வப்பெருந்தகைக்கு பெரும் தொகை கிடைத்து விட்டது போலும் ஆஹா ...


Mohamed Yousuff
ஜூன் 19, 2024 18:09

there is nothing wrong in supporting DMK Govt.


அசோகன்
ஜூன் 19, 2024 10:49

கொத்தடிமை கூட்டம்.....


sankaranarayanan
ஜூன் 19, 2024 09:34

கைக்கு ஒரு தொகை வந்துவிட்டால் பெருந்தொகை தாக்கு வந்தாப்பிலே என்று நினைத்தாற்போல இருக்கிறாரே


VENKATASUBRAMANIAN
ஜூன் 19, 2024 08:04

இந்தமாதிரி கேவலமானவர்களை காங்கிரஸ் வைத்துள்ளது.எப்படி காங்கிரஸ் வளரும். அதே ஐந்து சீட் தான். இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்கப்போகிறார்களாம்


பேசும் தமிழன்
ஜூன் 19, 2024 07:55

என்னமா ஜால்ரா தட்டுகிறார் பாருங்கள்...... எந்த கட்சி மீதாவது சவாரி செய்யும் உங்களுக்கு எதுக்கு மானம் கெட்ட பிழைப்பு ???... நீங்கள் எல்லாம் வாயே திறக்க கூடாது.


பேசும் தமிழன்
ஜூன் 19, 2024 07:42

வேங்கை வயல் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க காரணம் என்ன என்று கேட்டால் நன்றாக இருக்கும்.


மேலும் செய்திகள்