உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் பதவியேற்பு

பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் பதவியேற்பு

சென்னை: தமிழக பொறுப்பு டி.ஜி.பி.,யாக ஜி.வெங்கட்ராமன் நேற்று பதவியேற்றார். இந்நிகழ்வில், டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.ஜி.பி., அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்கவில்லை; இது, போலீஸ் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக போலீஸ் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், புதிய சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த அதிகாரிகள் பட்டியல் டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது.அதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டி.ஜி.பி., ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களில் ஒருவர் டி.ஜி.பி.,யாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தேர்வு நடைமுறைகள் நிறைவடையாததால், டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாக பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 33வது டி.ஜி.பி.,யாக, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் வெங்கட்ராமன் நேற்று பதவியேற்றார்.ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சங்கர் ஜிவால், வெங்கட் ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, 1994ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். பெரம்பலுார், சேலம், மதுரை, மத்திய புலனாய்வு பிரிவுகளில் முன்பு பணியாற்றியவர்.பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனுக்கு, மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதேவேளையில் டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்த, டி.ஜி.பி., அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் தொழில்முதலீடு ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுள்ள நிலையில், சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இந்நடவடிக்கை போலீசில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சங்கர் ஜிவால் ஏற்க மறுப்பு

பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., போன்றோருக்கு, 'ரோப் புல்லிங்' மரியாதை வழங்கப்படும். ஓய்வு பெறும் அதிகாரியை காரில் அமரவைத்து, அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் காரை கயிறு கட்டி இழுத்து செல்வர். இவை அந்த அதிகாரியின் சேவை மற்றும் பங்களிப்பை கவுரவிக்க அளிக்கப்படும் பாரம்பரிய மரியாதை. ஆனால், சங்கர் ஜிவால் இம்மரியாதை வேண்டாம் என கூறிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2025 16:10

காவல்துறையை நிர்வகிக்கும் பொம்மைதான் பொறுப்பு ........


Rathna
செப் 01, 2025 12:11

முதல் என்றால் நாமெல்லாம் யாரு??


raja
செப் 01, 2025 11:48

உன் கிருத்துவ கோயில்களிலும் தேர்பவனி உண்டு ...


vee srikanth
செப் 01, 2025 11:23

பேரம் படியைலயா ??


M S RAGHUNATHAN
செப் 01, 2025 10:41

அந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளாதது சரியே.


Sun
செப் 01, 2025 09:44

தகுதி படைத்த அதிகாரிகள் வரிசையில் இருக்கும் போது பொறுப்பு டி.ஜி.பி எதற்கு? காவல் துறையின் தலைமை பதவியில் நிரந்தர டி.ஜி.பியை நியமிக்கக் கூட இயலாத நிலையிலா தமிழக அரசு இருக்கிறது? துணிச்சலான முடிவுகளை பொறுப்பு டி.ஜி.பி எடுப்பாரா? அப்புறம் எப்படி சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும்?


duruvasar
செப் 01, 2025 09:25

வெங்கட்ராமனோ, கல்யாணராமனோ எல்லாம் திமுக திராவிடர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.


AMMAN EARTH MOVERS
செப் 01, 2025 09:23

யாரை வேண்டுமானில் டிஜிபி யாக வையுங்கள் ஆனால் ஒரு தமிழரை வைத்தால் நல்லது


Thiagaraja boopathi.s
செப் 01, 2025 08:51

திமுக திட்டம் நிறைவேறுகிறது


Tamilan
செப் 01, 2025 08:46

தேரிழுக்கும் இந்துமதவாத மூட நம்பிக்கைகள் அரசுக்குள்ளும் புகுந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தள்ளது


N Sasikumar Yadhav
செப் 01, 2025 09:48

இந்துமதவாதம் என காலத்துக்கு ஒவ்வாததை உளறுகிறது


Arjun
செப் 01, 2025 10:25

போலி தமிழா


ராஜாராம்,நத்தம்
செப் 01, 2025 11:18

போலி பெயரில் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை