உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் விறுவிறு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் விறுவிறு!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கட்சி முடிவை மீறி சுயேச்சையாக மனு தாக்கல் செய்ததற்காக அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன், தி.மு.க.,வில் இணைந்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் புறக்கணித்துவிட்டதால் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பு மனு பரிசீலனை, வாபஸ் என தேர்தல்கால நடவடிக்கைகள் நேற்று (ஜன.20) முடிய, 46 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களும் மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலாளர் செந்தில் முருகன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவரை கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அதிரடியாக நீக்கினார்.இந் நிலையில், அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் அவர் தம்மை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 21, 2025 15:12

என்ன விறு விறு?? ஒரு புண்ணாக்கும் இல்லை. இங்கே போனமுறை நாதக 10,000 சொச்சம் வாக்குகள் வாங்கியது. இந்த முறை இது டபுள் ஆகும். 20,000+ வாக்குகள் நாதக விற்கு கிடைக்கும். அதனால் என்ன? வெற்றி திமுக விற்குத் தான. நாதக விற்கு விழப் போகும் அந்த 10,000 அதிக வாக்குகள் அதிமுக அணி , பாஜக அணி கட்சிகளின் கோழைத்தனத்தால் கிடைக்கப் போகும் வாக்குகள். கோபத்தில் கொள்ளிக் கட்டையால் மண்டையை சொரிந்து கொள்ளும் மடத்தனம் போல, அதிமுக, பாஜக கட்சியினர் நாதக விற்கு ஓட்டு போட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சீமானும் ஊடகங்களும், நாதக அபார வளர்ச்சி என்று எழுதுவார்கள், பேசுவார்கள். அதிமுக, பாஜக தலைவர்கள் வர்களின் தொண்டர்களுக்கு தெளிவாக "நோட்டா வில் ஓட்டு போடுங்க " என்று சொல்ல வேண்டும்.


சம்பா
ஜன 21, 2025 11:16

இவன் M.G.R அனி, காலி பயல்


CHELLAKRISHNAN S
ஜன 21, 2025 15:19

he is going to fight against dmk candidate?


முக்கிய வீடியோ