உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

வேலுார்: வேலுார் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் நான்கு பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு பெண் மருத்துவரும், அவரது நண்பரும் வேலூர் - காட்பாடி - திருவலம் சாலையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றனர். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணிக்கு இருவரும் தியேட்டர் முன் ஆட்டோவுக்காக காத்து நின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=811jsf9m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு சென்றனர். தாங்கள் ஷேர் ஆட்டோ தான் என்றும் ஏறிக் கொள்ளலாம் என்றவுடன் அவர்களை நம்பி இருவரும் ஆட்டோவில் ஏறியுள்ளனர்.காட்பாடியில் இருந்து வேகமாக சென்ற ஆட்டோ, கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி அணுகு சாலையில் திரும்பியுள்ளது. பதற்றமடைந்த இருவரும் கேட்டதற்கு சாலையை மறைத்து வேலை நடப்பதாக டிரைவர் கூறியிருக்கிறார். அணுகு சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ, சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றங் கரைக்கு சென்றது. இருவரின் அதிர்ச்சி விலகும் முன்பு, அந்தக் கும்பல் பாலாற்றங்கரையில் அவர்களை ஆட்டோவில் இருந்து இறக்கியது.அவர்களில் ஒருவர் ஆண் நண்பரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டார். மற்ற 4 பேரும், ஆண் நண்பரின் கண் முன்னால் பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு கொடுமைக்கு ஆளாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஏடிஎம் அட்டையைப் பறித்துக் கொண்டு விடுவித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்த வழக்கு வேலுார் மகளிர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட்,குற்றவாளிகள் 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளான பார்த்திபன், பரத், மணிகண்டன் மற்றும் சந்தோஷ் ஆகிய 4 பேரும் தலா 20 ஆண்டுகள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
ஜன 31, 2025 16:59

இது மாதிரி ரெண்டுங்கெட்டான் தீர்ப்புகளுக்கு திருநெல்வேலி ஆணவக்கொலைகளே பெட்டர் தீர்ப்புன்னு தோணுது. மக்களின் உணர்வுகளோடு வெளையாடுறாங்க.


Kanns
ஜன 31, 2025 12:59

Good


நிக்கோல்தாம்சன்
ஜன 31, 2025 05:19

இந்த நான்கு சார்களும் வருங்காலத்தில் அந்த கட்சியில் துயிலக அணி செயலர் ஆகா பணிபுரிய வாய்ப்புள்ளது


Amar Akbar Antony
ஜன 30, 2025 22:07

உருப்படாத தீர்ப்பு இந்த தீர்ப்பு எப்படியென்றால் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று சொல்லிக்கொண்டே மதுவை குடிக்க ஊக்குவிப்பதுபோலுள்ளது இதை தடுக்கவேண்டுமானால் ஒரே தண்டனை உயிர் போகும்வரை தூக்கிலிடுக


Haja Kuthubdeen
ஜன 30, 2025 21:43

தண்டனை போதவே போதாது...இதே போல் அரபு நாடுகளில் நடந்திருந்தால் வேறுமாதிரி இருக்கும்.


Karthik
ஜன 30, 2025 21:17

ஒரு உயிர் கருவில் உருவாவது முதல் காடு சேரும் வரை அனைத்துக்கும் உண்டு கட்டணம். உயிர் வாழ அதை அவரவர்/ அவரை சார்ந்தவர் கட்டணும் - அரசு வரி உட்பட.உ.ம். மருத்துவம், கல்வி, வேலை, உணவு,உடை, இருப்பிடம் மே.பல.. ஆனால் விதிவிலக்காக குற்றவாளி என்று ஒருவர் தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டும் உணவு உடை இருப்பிடம் அனைத்தும் தண்டனை காலம் முழுவதும் இலவசமா??. என் கேள்வி - நாம் வியர்வை சிந்தி உழைத்து வரி கட்டுவது இதுபோன்ற குற்றவாளிகள் ஆயுளுக்கும் சிறையில் சிறப்பாக வாழத்தானா?? அவ்வாறு அனைத்தும் இலவசம் எனும்போது அவன் திருந்தி வாழ்வானா?/ திரும்பி சிறையில் வாழ விரும்புவானா??. ஏன் அந்த செலவை நீதிபதி / குற்றவாளி ஏற்றுக் கொள்ள வில்லை / கூடாது ??. இது என்ன மாதிரியான சட்டம் / தீர்ப்பு??. தயவுசெய்து யாரேனும் விளக்கவும். என்னை திட்டி பதிவிட்டாலும் கோபிக்க மாட்டேன்.


Rameshmoorthy
ஜன 30, 2025 20:35

Law should be changed to give them capital punishment immediately


Karthik
ஜன 30, 2025 20:21

ஏன் இந்த மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க நீதிமன்றம் தயங்குது??. இந்த மிருகங்களை / குற்றவாளிகளை வாழ வைக்கத்தான் நீதிமன்றங்கள் உள்ளதா?? ஆம் என்றால் ஏன் அந்த செலவை தீர்ப்பளித்த நீதிபதி / குற்றவாளி ஏற்பதில்லை ??? இந்த மிருகங்கள் ஆயுளுக்கும் சிறையில் உண்டு களித்து வாழ அப்பாவி பொதுமக்கள் உழைத்து வரி கட்ட வேண்டுமா???? இது என்ன நியாயம் நீதித்துறையே????? பிறகு எப்படி நாடு முன்னேறும்?????? படித்தால் மட்டும் போதுமா சிந்திக்க மாட்டீரா??????? எங்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பளம் வாங்க வில்லையா???????????????


Ramesh Sargam
ஜன 30, 2025 20:17

குற்றவாளிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா? செய்தாலும், நீதிமன்றம் அதை ஏற்கக்கூடாது. ஒருமுறை வழங்கிய தீர்ப்பு தீர்ப்புதான்.


தமிழ்வேள்
ஜன 30, 2025 20:15

ஏககாலத்துக்கு பதில் ஒவ்வொரு குற்றத்துக்கும் தனித்தனியாக அனுபவித்து கழிக்க வேண்டும் என்று கூறினால் தான் சரியான தண்டனை... சுமார் எண்பது ஆண்டுகள் வெளியே வர வாய்ப்பு இல்லை... தற்போதைய தண்டனை படி பத்து ஆண்டுகளில் ரெமிஷன் கிடைக்கும்.. வெளியே வந்து மீண்டும் பாலியல் அத்துமீறல்களை செய்வான்கள்


முக்கிய வீடியோ