உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்துவ மதபோதகருக்கு போலீஸ் வலை!

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்துவ மதபோதகருக்கு போலீஸ் வலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மதபோதகர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ், 37. இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் குடியிருந்து வருகிறார்.கடந்த, 11 மாதங்களுக்கு முன், இவர் தனது வீட்டில் விருந்து ஒன்றை நடத்தினார். அதில் இவரது மாமனார் தத்து எடுத்த, 17 வயது சிறுமி பங்கேற்றார். சிறுமியுடன் அவரது அண்டை வீட்டு, 14 வயது சிறுமியும் உடன் வந்திருந்தார். விருந்தின் போது, இரு சிறுமிகளுக்கும், ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.தொடர்ந்து சிறுமிகளிடம் இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், 14 வயது சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். தலை மறைவாக உள்ள ஜான் ஜெபராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ari Munusamy
ஏப் 08, 2025 06:49

இப்போது நிறைய மிஷன்கள் தனியார்க்கு சொந்தமானது. யாரும் அவைகளை கட்டுப்படுத்த முடியாது. வசூலாகும் நிதி அவர்களுக்கு சொந்தமாகிறது. நிறைய பேர்கள் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். யூடியூபில் இவர்கள் பற்றி நிறைய காணொளிகள் உள்ளன.


Kasimani Baskaran
ஏப் 08, 2025 04:06

கோவை தமிழ் நாட்டிலா இருக்கிறது? - மானங்கெட்ட பாமர உடன்பிறப்புக்கள் கேள்வி...


Kulandai kannan
ஏப் 08, 2025 00:24

கிறித்தவத்தில் மத போதகர் ஆவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.


Thetamilan
ஏப் 07, 2025 22:07

காவல்துறை உள்துறை அனைத்திற்கும் கட்டுக்கடங்காத நிதி. அனைத்தும் மக்களிடம் சுரண்டியது கூளையடித்ததில் தெண்டமாக பெற்றது . இருந்தும் எந்த குற்ற செயல்களும் குறையவில்லை . நாடுமுழுவதும் இதே நிலைதான் . ஆட்சிக்கேற்ப மீடியாக்கள் செய்யும் பிரச்சார உத்திகள் மட்டும்தான் மாறுகின்றன .


Savitha
ஏப் 08, 2025 11:29

நீங்க ஜால்ரா அடிக்குற திமுக ஆட்சியில் தான் இந்த அவலம், அதை பற்றி பேச?


Ramesh Sargam
ஏப் 07, 2025 20:46

இன்று நாடுமுழுவதும் பல இளம் மதபோதபோதகர்கள் வந்துவிட்டனர். அவர்கள் மதத்தை பற்றி போதிக்கிறார்களோ இல்லையோ, பாலியல் துன்புறுத்தல் மிக மிக சிறப்பாக செய்கின்றனர். பகலில் போதனை. இரவில் போதனை கேட்ட பெண்களுக்கு வேதனை.


முதல் தமிழன்
ஏப் 07, 2025 20:32

இவரை உட கூடாது. இவர் பக்கா ப்ராடுன்னு நினைக்கிறன். இயேசுவின் பெயரால் இவன் ஆடும் டான்ஸ் சகிக்காது. புடிச்சி லாடம் கட்டி விடுங்கள். முடிந்தால் நிரந்தர ஊனம் ஆக்கி விடுங்கள் அந்த பகுதியில். ஜென்மத்துக்கும் பெண்களை தொட கூடாது. இவர் சுக வாசி மற்றவர் பணத்தில்.


Rasheel
ஏப் 07, 2025 19:49

பாவ மன்னிப்புகாரன் ஏழைகளிடம் இருந்து 10% வருமானத்தை வாங்குவதோடு, குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை.


தமிழ்வேள்
ஏப் 07, 2025 19:47

அதென்ன பிரார்த்தனை கூடம்... ஏகப்பட்ட திருட்டு சபைகள் உள்ளன... அந்த வகையறாவில் இது ஒன்று...இதன் பெயர் என்ன சர்ச் என்று செய்தியில் தெளிவாக வெளியிட்டால் என்ன? அடுத்த சம்பவம் நிகழாமல் அட்லீஸ்ட் தவிர்க்க படலாம் தானே? போலீசார் வழக்கு பதிந்த பிறகு ஏன் பெயர் தெரிவிக்காமல் பூடகம்?


vadivelu
ஏப் 07, 2025 19:40

அயோக்கியனை மதம் பார்த்து மன்னிக்க கூடாது


Amar Akbar Antony
ஏப் 07, 2025 19:26

யாரைத்தான் நம்புவதோ குழந்தைகள் நெஞ்சம்? அம்மம்மா பூமியிலே ஆயிரம் பாதர் உடம்பெல்லாம் வெள்ளைத்துணி மனமெல்லாம் வக்கிரம்


சமீபத்திய செய்தி