உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா

விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா

புதுடில்லி: விமானத்தில் உடைந்த இருக்கையில் அமர்ந்து, சிரமப்பட்டு பயணத்ததாக புகார் கூறிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சவுகானிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியது.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இருந்து டில்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்ற போது, கிடைத்த மோசமான அனுபவத்தை, மத்திய வேளாண் துறை அமைச்சர் சவுகான் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் அந்த பதிவில் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tcu4qghe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று நான் இயற்கை வேளாண்மை தொடர்பான ஒரு விழாவை தொடங்கி வைப்பதற்காக, போபாலில் இருந்து டில்லிக்கு பயணிக்க வேண்டியிருந்தது. ஏர் இந்தியா விமானத்தில் (ஏ.ஐ,436) டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தேன். எனக்கு, எண் 8c இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.விமானத்தில் சென்று இருக்கையில் அமர்ந்தபோது, அது உடைந்து கீழே இறங்கி இருந்தது. இருக்கையில் அமரும் போது கஷ்டமாக இருந்தது. இருக்கை மோசமாக இருப்பது பற்றி விமான ஊழியர்களிடம் கேட்டபோது, 'இந்த இருக்கை சரியில்லை, இதன் டிக்கெட்டை விற்கக்கூடாது என்று நிர்வாகத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், அப்படி இருந்தும் டிக்கெட் விற்று விட்டதாகவும்' அவர்கள் கூறினர்.விமானத்தில் என்னுடன் பயணம் செய்த சக பயணிகள் அவர்கள் இருக்கையில் அமருமாறு கேட்டுகொண்டார்கள். ஆனால் நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். எனக்காக இன்னொரு நபரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதே இருக்கையில் அமர்ந்து எனது பயணத்தை மேற்கொண்டேன். டாடா நிர்வாகம் வாங்கிய பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை மேம்பட்டு இருக்கும் என நினைத்தேன். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முழு கட்டணத்தையும் வசூலித்த பிறகு இப்படி உடைந்த இருக்கையில் உட்கார வைப்பது நியாயமா? இது பயணிகளை ஏமாற்றும் செயல் இல்லையா? எதிர்காலத்தில் எந்தவொரு பயணியும் இதுபோன்ற சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? இது போல்தான் பயணிகள் சிரமத்தை எதிர்க்கொள்ள நேரிடுமா? என சவுகான் கேள்வி எழுப்பி இருந்தார்.

மன்னித்து விடுங்கள்!

இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அமைச்சர் சவுகானிடம் மன்னிப்பு கேட்டது. 'ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்' என ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

nv
பிப் 22, 2025 18:37

பெரும்பாலான விமான நிறுவனங்கள் மக்களின் குறைகளை கண்டு கொள்வது இ‌ல்லை.. இவரை மாதிரி மந்திரி சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள்.. விமான துறை அமைச்சர் இதை சரி செய்ய வேண்டும்.. ஆட்டோ காரர்கள் மாதிரி இவர்கள் இஷ்டப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது? கட்டுப்படுத்துவது அவசியம்..


SVR
பிப் 22, 2025 18:02

இந்த ஏர் இந்தியா படு பாடாவதி நிறுவனம். எனக்கும் ஒரு அனுபவம் இந்த ஏர் இந்தியா உடன். நடு வானத்தில் பாதி தூரம் பறந்து கொண்டிருந்தபோது கைப்பிடி உடைந்து போயிற்று. விமான பணியாளரிடம் சொன்னால் அவர் ஒரு புன்னகை செய்துவிட்டு போய்விட்டார். இது தான் ஏர் இந்தியா. வந்தே மாதரம். பாரத் மாதா கி ஜெய்.


vee srikanth
பிப் 22, 2025 17:21

நாங்களும் சாலைகளுக்கு வரி மற்றும் சுங்கம் தருகிறோம் - ஆனால் மோசமனான சாலைகளில் தான் பயணம் செய்ய நாங்கள் வரி /சுங்கம் காட்டுகிறோம் - நாங்கள் எங்கே சென்று எங்கள் கோபத்தை காண்பிக்க


murugan
பிப் 22, 2025 19:04

சுங்க வரி செலுத்தி பயணிக்கும் 90 சதவிகிதம் சாலைகள் நன்றாகத்தான் உள்ளது. இது எனது அனுபவம். வாசகர் ஏதோ கட்சி உறுப்பினர்போல் பதிவிட்டுள்ளார்.


venugopal s
பிப் 22, 2025 17:08

நாங்களும் அப்படித்தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாடு நன்றாக இல்லை என்று மாற்றி பாஜகவின் கையில் நாட்டைக் கொடுத்து விட்டு ஏமாந்து போய் இப்போது வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் !


Sundararajan Srinivasan
பிப் 22, 2025 14:53

இந்த இண்டிகோ இன்டர்நேஷனல் விமானந்திலேயே நான் துபாயில் இருந்து சென்னைக்கு வரும்போது இருந்தது . புகார் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அதில் இருந்து அந்த விமானந்தையை விரும்புவதில்லை


subramanian
பிப் 22, 2025 14:37

மற்ற பயணிகள் சீட் கொடுத்த போதும், சக பயணிகளை சிரமப்படுத்தாமல் உடைந்த இருக்கையில் அமர்ந்து பயணித்த அமைச்சரை பாராட்டுகிறேன்.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 22, 2025 17:21

இதை சமூக வலைதளத்தில் பதியாமல் நேரடியாக புகார் தெரிவித்திருந்தால் பாராட்டலாம். என்ன எதிர்பார்ப்பது இவர்களிடம்?


Sridhar
பிப் 22, 2025 14:33

நம்ம ஊரு MP மாதிரி பிஸ்னஸ் க்ளாஸ் ல போகாம எகானமி ல பயணம் செஞ்சிருக்கிறார் மந்திரி


Ramona
பிப் 22, 2025 14:27

அந்த நிருவனத்தை இழுத்து மூட மும்முரமாக, முழு வேலையாக அதிலுள்ள ஊ.....ள் முடிவாக இருக்காங்க ..விரைவில மூடு விழா நடக்கலாம்.


S.Martin Manoj
பிப் 22, 2025 13:30

ஏன் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டியதுதானே ஓசி பயணம் தானே


N Sasikumar Yadhav
பிப் 22, 2025 14:10

திராவிட களவானிங்க என்னம் அவனுங்க மாதிரியே கீழ்த்தரமானது


subramanian
பிப் 22, 2025 14:40

மார்டின், உனக்கு இதுபோன்ற உடைந்த இருக்கை எப்போதும் எங்கும் கிடைக்கும். கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.


S.Martin Manoj
பிப் 22, 2025 16:01

சசிகுமார் போனவாரம் MP தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பயணத்தில் தெரிவித்த புகாருக்கு உங்களின் உங்களை போன்றவர்களின் பெரும்பாலான கருத்துக்கள் இப்படி தான் இருந்தது உங்களுக்கு வந்தா ரத்தம் அடுதவுங்களுக்கு வந்தா தக்காளி சட்னி அப்படித்தானே ஏன் கோடிக்கணக்கான இந்தியர்கள் படும் பாடு இதைவிட மோசமாக உள்ளது அமைசர்நா கொம்பா முளைசிருக்கு .


Ray
பிப் 22, 2025 13:19

AIR INDIA மகாராஜா சவ்கிதார் ஆனாரோ


murugan
பிப் 22, 2025 19:06

இதுதான் உமது புத்தி. ஒரு நாளும் திருந்தாத ஜென்மங்கள் இந்த திராவிட கும்பல்கள்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை