உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவில் 4,000 யானைகள் குறைவு; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 4,000 யானைகள் குறைவு; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

கம்பம்: இந்தியாவில் 2017க்கு பின் 4,000 யானைகள் குறைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுதும் 2017ல், 27,312 யானைகள் இருந்துள்ளது. 2021- 2025 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 22,446 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதன்படி 4,065 யானைகள் குறைந்துள்ளன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 11,934 யானைகள் உள்ளன. கர்நாடகாவில் 6,013 யானைகள் உள்ளன. அசாம் 4,159, தமிழகம் 3,136, கேரளா 2,783 என உள்ளது. யானைகள் வாழ்விடம் தேயிலை, காபி தோட்டங்களாகவும், நிலங்களில் வேலி அமைத்தல், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது போன்ற காரணங்களால் யானைகள் பாதிக்கப்பட்டு வருவ தாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வன உயிரின சட்டங்களில் மாற்றங்கள் செய்து, உடனடியாக யானைகள் வாழ்விடங்கள் குறையாமல் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே அவற்றின் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியும் என வன உயிரின ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிந்தனை
அக் 21, 2025 14:11

கோவில் நிலங்கள் காணாமல் போச்சு கோவில் சிலைகள் காணாமல் போச்சு இப்போ அடுத்து காட்டில் யானைகளே காணாமல் போகுது சபாஷ்


Kulandaivelu
அக் 21, 2025 12:02

காடுகளின் பரப்பளவு சுருங்கியது முக்கிய காரணம் ஆகும் அதுமட்டுமின்றி ரிசார்ட் போன்ற கேளிக்கை விடுதிகள் பலமடங்கு பெருகியது மிக முக்கிய காரணங்களில் ஒன்று. அரசு அதிகாரிகள் இதை பற்றி எல்லாம் கண்டு கொள்வதே இல்லை பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். பல ரெசார்ட்களை முன்னாள் ஊட்டி மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா அவர்கள் மூட உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆட்சி மாறியதும் இவர் ட்ரான்ஸபர் செய்யப்பட்டார். இந்த ஆட்சியில் கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ரிசார்ட்கள் முளைத்துள்ளன இவை எல்லாம் யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.


Ramesh Sargam
அக் 21, 2025 07:22

ஒரு பத்து யானைகள் காணாதபோதே அதிகாரிகள் தூங்காமல் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 4,000 யானைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகளின் அலட்சியம்தான் இப்படி அதிக அளவில் யானைகள் காணாமல் போனதற்கு காரணம். மனிதர்களை மனித உறுப்புகளுக்கு கடத்துவதுபோல, ஒரு கும்பல் யானைகளை அதன் தந்தங்களுக்கு கடத்துகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.


சமீபத்திய செய்தி