உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏடாகூட அளவுகளில் ஷூக்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏடாகூட அளவுகளில் ஷூக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச ஷூக்கள், சரியான அளவில் இல்லாததால் அதை பயன்படுத்த முடியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு உட்பட, 21 வகை இலவச நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. சர்ச்சை இவற்றில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒரு செட் ஷூ, இரண்டு செட் சாக்ஸ்கள் வழங்கும் திட்டமும் அடங்கும். தற் போது, மாவட்டம் வாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில், மாணவர்களின் கால் அளவுக்கு ஏற்ப ஷூக்கள் இல்லாததால், தரமாக இருந்தும் அதை பயன்படுத்த முடியவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறிய தாவது:

மாணவர்களுக்கு பள்ளி வாரியாக, 6, 7, 8, 9 என, கால் அளவு எடுக்கப்படுகிறது. ஆனால், ஷூக்கள் வினியோகிக்கும் போது மாவட்டத்திற்கான எண்ணிக்கை அடிப்படையில், மொத்தமாக இறக்கி வைக்கப்படுகிறது. அதில், ஒரு மாவட்டத்தில், அளவு ஆறு சைஸ் ஷூக்கள் அதிகமாகவும், வேறு மாவட்டங்களில், எட்டு சைஸ் ஷூக்கள் அதிகமாகவும் இறக்கப்படுகின்றன. மாவட்டம் வாரியாக வரப்பெற்ற ஷூக்களில் இருந்து, அது எந்த சைஸ் என்றாலும், வேறு வழியின்றி மாணவர்களுக்கு பெயரளவில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு கால் அளவு எடுப்பது வீணடிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஷூக்கள் வினியோகிக்க ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம், பள்ளிகள் வாரியாக எத்தனை சைஸ்களில் மாணவர்களுக்கு ஷூக்கள் தேவையோ அதன்படி பேக்கிங் செய்து வினியோகிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். ஏனோ தானோ அவ்வாறு செய்தால் ஷூக்கள் வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து நடவடிக்கை இல்லை என்றால் இதுபோன்ற 'ஏனோ தானோ' வினியோகத்தால், மாணவர்கள் நலன்சார் திட்டங்களுக்கு, அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி 'கமிஷனுக்காக' தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது தொடரத்தான் செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !