உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்

கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்; ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் அளித்த பேட்டி: தமிழகத்தின் பிரதானமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களில், இறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மற்ற மதத்தினர், தங்கள் மதம் சார்ந்த ஆலயங்களில், இதுபோன்று கொண்டாட அனுமதிப்பதில்லை.குறிப்பிட்ட அந்நாளில், கோவில் வங்கி கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சிறப்பு பூஜை, மதிய விருந்து கொடுக்கின்றனர். இதனால், கோவில்கள் புனித தன்மை கெடுகிறது. கோவிலை கட்சி தலைமையிடமாக மாற்ற ஹிந்துக்கள் விடக்கூடாது.தமிழகத்தில் உள்ள, ஆறு கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து, ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரே கோவிலில் கூட வேண்டும். பின், பத்து நிமிடம், கோவில்களில் இறந்த அரசியல் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என, பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக, அரசின் இந்த முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.இப்படி செய்வதற்கான நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில், அனைத்து ஹிந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kulandai kannan
ஜூன் 13, 2025 19:16

கூட்டணி ஆட்சி என்று வந்தால், அறநிலைத் துறையைக் கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். ஒருவேளை திமுக எதிர்ப்பு அலை வீசி, அதிமுக-பாஜக கூட்டணி மிகப் பெரும்பான்மை பெற்றால், இபிஎஸ் துரோகம் செய்ய வாய்ப்பு அதிகம். பாஜக சூதானமாக நடந்து கொள்ள வேண்டும்.


venugopal s
ஜூன் 13, 2025 16:21

இவர் ஒரு சிரிப்பு போலீஸ் நம்பர் டூ, நம்பர் ஒன் சிரிப்பு போலீஸ் யார் என்று ஊருக்கே தெரியும்!


Rathna
ஜூன் 13, 2025 12:36

திருவள்ளுவர் இருந்து இருந்தால், கடவுளுக்கு இவ்வுலகம் இல்லை அதுபோலே, நேர்மையோர்க்கு இவ்வுலகம் இல்லை. என்று புது குறள் எழுதி இருப்பார்


M Ramachandran
ஜூன் 13, 2025 11:44

இப்போது நடக்கும் அரசு குடும்ப அரசியல் செய்யும் அரசு. செத்த அரசு. இனி கடையசி ஊர்வலம் தான்.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 10:26

நாத்திக அண்ணாதுரை பிறந்த நாளுக்கு ஆத்திகர்கள் காசில் ஆலயங்களில் அறநிலையத்துறை விருந்து. இதே போல ராமர் முருகன் பிறந்த நாட்களில் பெரியார் நினைவிடத்தில் விருந்து நடத்துவார்களா?


R.P.Anand
ஜூன் 13, 2025 10:01

அய்யா இவன் சுத்தி வலச்சி ஒதுக்கீட்டில் கை வச்சிருக்கான். இந்து நாடார் . இந்து கிருத்துவர் போன்ற ஒதுக்கீட்டை எடுத்து இப்போ கிருத்துவ நாடார். கிருத்துவ வன்னியர் போன்றவர்களுக்கு கொடுக்க இந்த ஏற்பாடு பண்ணி இருக்காங்க.


N Annamalai
ஜூன் 13, 2025 07:54

நம்ம மக்கள் இது போல் இணைவது நடக்குமா ?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 13, 2025 07:21

அருமையான முன்னெடுப்பு, கீழ்த்தரமான பகுத்தறிய தெரியாத கருங்காலிகளை நீங்க அடையாளம் காணும்போது அவர்களே வேறு விதமா உங்களை தூண்டி விடுவாங்க


sridhar
ஜூன் 13, 2025 07:17

தட்டிக்கேட்க வேண்டிய ஹிந்து மஹா ஜனங்கள் பிரியாணிக்கு பலியாகிவிட்டனர். கிறிஸ்துவ இஸ்லாமியர்களிடம் இன்னமும் மத பற்றும் தன்மானமும் இருப்பது பாராட்டுக்குரியது .


Svs Yaadum oore
ஜூன் 13, 2025 06:48

ஹிந்து மதம் வேண்டாம், ஹிந்து என்றால் திருடன் என்று அர்த்தம் .....ஹிந்து சமய அற நிலையத்துறை என்ற பெயரில் உள்ள ஹிந்து வார்த்தையை நீக்கனும் ...விடியல் வழங்கும் ஜாதி சான்றிதழில் ஹிந்து என்ற பெயர் நீக்கப்பட்டது. ஆனால் இறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், ஆண்டுதோறும் ஹிந்து கோவிலில் கொண்டாடப்படுகிறது ....இதற்கு கோவில் வங்கி கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சிறப்பு பூஜை, மதிய விருந்து கொடுக்கின்றனராம் .....இந்த பணமெல்லாம் விடியல் அப்பன் வீட்டு பணமா ??....விடியல் சமூக நீதி மத சார்பின்மையாக இந்த நாளை சிறுபான்மையுடன் அவனுங்க இடத்தில அவனுங்க பணத்தில் கொண்டாட வேண்டியதுதானே ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை