உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா பட்டத்தை கொண்டாடும் முதல்வர் மாணவியர் பாதுகாப்பை கை கழுவலாமா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

அப்பா பட்டத்தை கொண்டாடும் முதல்வர் மாணவியர் பாதுகாப்பை கை கழுவலாமா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

சென்னை : 'அப்பா என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவியரின் பாதுகாப்பை கை கழுவலாமா?' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

கோவை, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள், போதையில் வருவதோடு, தவறான முறையில் சீண்டி, பாலியல் ரீதியாக அத்து மீறுவதாக, மாணவியர் குற்றஞ்சாட்டி, வெளியிட்ட வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளியில் புகார் அளித்தால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததுடன், 'செய்முறை தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்து விடுவர்,' என தெரிவிக்கின்றனர். மாணவியரின் வீடியோ வாயிலாக, அரசு பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது தெளிவாகிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல, அரசு பள்ளி ஆசிரியர்களே, மாணவியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம், தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? மாணவியர் தைரியமாக புகார் அளிக்க கூட, தி.மு.க., ஆட்சியில் வழி இல்லையா? அரசு பள்ளியில் தரமான கல்வி இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கும் நிலையில், மாணவியருக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகி விடாதா? அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவியரின் பாதுகாப்பை கைகழுவுவது தான் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமா? 'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவியர் பாதுகாப்பை கைகழுவாமல், உரிய நடவடிக்கை எடுப்பாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K.n. Dhasarathan
ஆக 26, 2025 21:14

ஐயா நைனார் அந்த பழைய பாக்கி 4 கோடிகள் ட்ரைனில் பிடிபட்ட பணம் பற்றி வாயை திறக்க மாடீர்களா? இன்னுமா டிரைவர் பணம் என்கிறீர்கள், பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், இல்லைனா இனகம் டாக்ஸ் ஆளுங்க தேடி வந்துருவாங்க


venugopal s
ஆக 26, 2025 19:54

நயினார் நாகேந்திரன் நடிகர் சரத்குமார் எம் ஜி ஆருக்கு இணையாக மக்கள் சக்தி உள்ளவர் என்று வாய் கூசாமல் மீட்டிங்கில் பேசியுள்ளாரே, இதற்கு அதிமுகவினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று புரியவில்லை. அடுத்த மீட்டிங்கில் குஷ்பு ஜெயலலிதாவை விட அதிகமாக மக்கள் ஆதரவு பெற்றவர் என்றும் கூறுவாரோ?


Natarajan Ramanathan
ஆக 26, 2025 19:25

அவருக்கு வேறு ஒருவன் மாமா என்று பொருத்தமாக பெயர் வைத்து விட்டானே? எனவே இனி மாணவர்களுக்கு மாமாவேலைதான் பார்க்கப்போகிறார்.


M Ramachandran
ஆக 26, 2025 17:46

மென்மையான கண்டனங்களால் திருந்த கூடிய ஜென்மங்கள் அல்ல ஸ்டாலினும் ராகுலும்


T.sthivinayagam
ஆக 26, 2025 17:32

சரி சார் இனி நைனா பட்டத்தை வைத்து கொள்ளட்டும்


Sun
ஆக 26, 2025 13:48

என்னது அப்பாவா? அப்ப கனிமொழி அத்தையா?


Prathab
ஆக 26, 2025 13:09

அவர்களின் நிர்வாக முறை வித்தியாசமாக இருப்பதாலா?


Senthoora
ஆக 26, 2025 12:36

முதலில் தர்மஷாலாவின் மர்மத்தை விளக்குங்கள்.


ஆரூர் ரங்
ஆக 26, 2025 14:52

கர்நாடக காங்கிரசு அரசே சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அது வெறும் புரளி எனக்கூறிவிட்டது. புகாரைளித்தவர் களி தின்கிறான்.


Rajan A
ஆக 26, 2025 11:00

அவங்களே மறந்துட்டாங்க. நீங்க ஏன் மறக்கல. அதெல்லாம் அப்ப அப்ப பண்ற பில்டப். மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது


nisar ahmad
ஆக 26, 2025 09:21

நாகு இந்த கேள்விய ...


புதிய வீடியோ