உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  போராடிய மாணவியரை போலீசார் தாக்குவதா?

 போராடிய மாணவியரை போலீசார் தாக்குவதா?

அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி, அறவழியில் போராடிய பள்ளி மாணவியர் மீது, முதல்வர் விஜயின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது. நியாயமான கோரிக்கைக்காக போராடிய பெண் குழந்தைகளை தாக்கியிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என, தேர்தல் களத்தில் முழங்கிய முதல்வர் விஜய், தற்போதைய அராஜக சம்பவத்துக்கு, என்ன பதில் சொல்லப் போகிறார். த.வெ.க., ஆட்சியில், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, வெறும் காகித விளம்பரமே என்பதை, கோடாலி கிராம சம்பவம், உலகிற்கு தோலுரித்து காட்டி உள்ளது. மதுவின் பிடியில் இருந்து, தங்களை காக்க போராடிய, பிஞ்சு குழந்தைகள் மீது, தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது, த.வெ.க., அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நயினார் நாகேந்திரன்,தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை