உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்சிப் பொருளான தெய்வத் திருமேனிகள்: பொன் மாணிக்கவேல் வேதனை

காட்சிப் பொருளான தெய்வத் திருமேனிகள்: பொன் மாணிக்கவேல் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: நம் தெய்வ திருமேனிகளை காட்சி பொருளாக வைத்து கேவலப்படுத்தக் கூடாது, என்பது தான் என் நோக்கம் என முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.திருச்சியில், ஆன்மிக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேசியதாவது: திருச்சியில் நடத்தப்பட்ட ஆன்மிக அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தில், 40 அமைப்புகள் பங்கேற்றுள்ளன. அரசியல் சார்ந்த ஆன்மிக அமைப்புகளாக இருந்தாலும் அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் நோக்கம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y9s1dco2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

3.50 லட்சம் விக்ரகங்கள்

என் பணிக்காலத்தில், துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. நாடு முழுவதும் உள்ள 3.50 லட்சம் விக்ரகங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை, அரசு தரப்பில் இதுவரை செய்யவில்லை. தொல்லியல் துறையினரும் பழமையான வரலாற்று ஆதாரங்களை திரட்டி, பதிவு செய்வதில்லை.திருவெண்காடு கோயிலில் புதைந்து கிடந்த விக்ரகங்கள், 1925, 1951ம் ஆண்டுகளில் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

35 தெய்வ திருமேனிகள்

சென்னை அருங்காட்சியகத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலையை காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். முன்னோர்கள் படையெடுப்பு கால கட்டங்களில் தெய்வங்களின் உலோக திருமேனிகளை மண்ணில் புதைத்து வைத்தனர். தமிழகம் உட்பட பல கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 35 தெய்வ திருமேனிகள், விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்டுக் கொண்டு வர அரசிடம் சக்தி இல்லை. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட 1,414 விக்ரகங்கள் வாஷிங்டனில் உள்ளன. விக்ரகங்களை கொள்ளையடித்து, வெளிநாட்டுக்கு விற்ற சுபாஷ் சந்திர கபூரை, 2012ல் பிடித்துக் கொடுத்தேன். மீட்கப்பட்ட தெய்வத் திருமேனிகள், மக்கள் வழிபாட்டுக்கு கோயில்களில் ஒப்படைக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளிடம் இது பற்றி எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது.நம் தெய்வ திருமேனிகளை காட்சி பொருளாக வைத்து கேவலப்படுத்தக் கூடாது, என்பது தான் என் நோக்கம். முதல்வரிடம் உள்ள தனி நபர்களின் 100 கோடி ரூபாய் நிதியை கொண்டு இடிந்து கிடக்கும் 150 கோவில்களை புனரமைக்க வேண்டும். அந்த கோரிக்கைக்காக தான் ஆன்மிக அமைப்புகளை ஒருங்கிணைக்கிறேன்.மொத்தம் 34,119 கோவில்களில் ஒரு நாள் வருமானம் 14 முதல், 27 ரூபாய் தான். இந்தியா முழுவதும் மொத்தம் 2,622 விக்ரகங்கள் திருடப்பட்டுள்ளன. அதில் 1,414 விக்கிரகங்கள் மட்டுமே போலீஸ் விசாரணையில் உள்ளன. வழக்குகள் தொடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது. ஆனால், அரசு செத்த பூனை போல் கிடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

spr
ஜூலை 01, 2024 15:51

இன்று ஆலயங்களே அருங்காட்சியகமாகத்தான் இருக்கிறது. இனி ஒவ்வொரு கோயிலிலும் திருப்பதி போல "ட்யூப்லிகேட்" ஆலயங்கள் கட்டி திரைத்துறையினர் படமெடுக்க வழி செய்தாலும் வியப்பில்லை. அரசியல் தலைவர் ஆனாலும் ஆண்டவனே ஆனாலும் கண்முடித்தனமாக பின் செல்பவர்கள் அதிகமுள்ள தமிழகத்தில் இவர் புலம்பல் எதுவும் செய்ய இயலாது என்பது மனா வருத்தம் தரும் செய்தியே மக்களுக்கு உண்மையிலேயே கடவுள் பக்தியிருந்தால், இதனை நடக்க விட மாட்டார்கள் பிற மதத்தவர் ஆலயங்களின் மேற்கூரையேறி நடனமாடும் காட்சிகளை எவரும் பார்த்ததுண்டா புகைப்படம் தடை செய்யப்பட்டது எனும் இந்து ஆலயங்களில் பிரகாரங்களிலேயே கற்பழிப்பு உட்பட அனைத்தும் படம் பிடிக்கப்படுகின்றதே


அபிஷேகபாண்டியன்
ஜூன் 30, 2024 22:08

எல்லா இடத்திலேயும் காட்சிப்.பொருள்கள்தான் சாமி. போதாததுக்கு இங்கே திருமஞ்சனம், அபிஷேகம் லாம் செஞ்சு காமிப்பாங்க. அலங்காரம்.பண்ணும் போது திரை போடுறாங்க.


sridhar
ஜூன் 30, 2024 21:01

பணத்தை வாங்கிக்கொண்டு பாவிக்கு வோட்டு போடணும் , அந்த பாவத்தை தொலைக்க கோவிலுக்கு போய் உண்டியில் பத்து ருபாய் போடணும், இது தான் ஒரு சராசரி தமிழ் இந்ததுவின் வாழ்வியல் … திரு பொன் மாணிக்கவேல் போன்ற உத்தமர்களை பெற நமக்கு தகுதி இல்லை.


Bala Paddy
ஜூன் 30, 2024 19:27

தமிழர்கள் தன மானத்தை தொலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தறி கெட்ட அரசு குடிகார மக்கள் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.


M Ramachandran
ஜூன் 30, 2024 19:24

இங்கு தமிழக மக்களுக்கு எது எப்பாடி போனால் நமக்கேன்ன என்ற மனோ பாவம். திரு கோயில் பணத்தை தாராளா மாக வேறு மத மாற்ற உபயோக படுகிறது அதை பற்றி யாரும் கவலை பட வில்லை. சிலை திருட்டு போவதை பற்றியா கவலைய கொள்ள போகிறார்கள். ஏற்கனவே ஒரு தலைவர் தமிழ் நாட்டு மக்களை சோற்றால் அடித்த பிந்தங்கிகள் என்று அளந்து வைத்து விட்டு போயிருக்கிறார் அப்புறம் என்ன


KRISHNAN R
ஜூன் 30, 2024 19:15

இவர் சொல்வது முற்றிலும் உண்மை. யார் கேட்கிறார்கள்


Jaihind
ஜூன் 30, 2024 18:54

தமிழ்நாட்டில் நடப்பது விடியாமூஞ்சி அரசுதான் , அதனால் நீங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள் பாதிக்குபாதியாவது மீட்டு கொண்டுவருவார்கள் என்று நம்பலாம் , ஜைஹிந்த் உங்களின் இந்த தீராத முயற்சிக்கு வாழ்த்துக்கள்


sundarsvpr
ஜூன் 30, 2024 18:39

சாளக்ராம சிலைகளுக்கு தினப்படி ஆராதனை தேவையில்லை என்று கூறுவார்கள். விளக்கு மட்டும் ஏற்றினால் போதும் என்று கூறுவார்கள். ஆனால் விக்ரக தெய்வங்களுக்கு ஆகம விதிப்படி தினப்படி ஆராதனை செய்யவேண்டும். நிறைய மடங்களுக்கு நல்ல வருமானம் உள்ளன. பக்தர்களும் நிறைய வருகிறார்கள். மடாதிபதிகள் சிலைகளை பெற்று ஆகம விதிகளின்பிரகாரம் பிரிசிஸ்டை செய்து பூஜை செய்யலாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை