நவ., 17ல் முற்றுகை போராட்டம்
போத்தனுார்: கோவை, ஈச்சனாரி தனியார் மண்டபத்தில், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் ஆகியவற்றில், 3.5 சதவீதமாக உள்ள இடஒதுக்கீட்டை, ஏழு சதவீதமாக உயர்த்தவேண்டும் என்பது உட்பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜவாஹிருல்லா கூறுகையில், ‘‘முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நவ., 17ல் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். த.வெ.க., சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. கட்சி நிர்வாகி வீட்டில், 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள், போதையில்லா தமிழகத்தை எப்படி உருவாக்குவர்,’’ என்றார்.