உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வெள்ளி விலை ரூ.5,000 அதிகரிப்பு

 வெள்ளி விலை ரூ.5,000 அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு, 400 ரூபாய் குறைந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,150 ரூபாய்க்கும், சவரன், 1,13,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,12,800 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 285 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி