மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
07-Dec-2025
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்கின்றன. இதனால், அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,400 ரூபாய்க்கும், சவரன், 99,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 222 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 12,440 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 99,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 224 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
07-Dec-2025