உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; சென்னையில் அவசரகதியில் தரையிறக்கம்

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; சென்னையில் அவசரகதியில் தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி துரித நடவடிக்கை ஒன்றை எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7vu9d2ri&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, விமானம் தரையிறங்க சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக, 159 பயணிகள் உயிர் தப்பினர். மற்றொரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kalyan
ஜன 10, 2025 14:21

ஏர் இந்திய விமானம் AI 356 என்று பல ஊடகங்கள் உதாரணம் இந்தியா டிவி தெளிவாக எழுதும்போது உங்கள் நிருபர் சிங்கப்பூர் விமானத்தில் என்று சற்று திரித்து எழுதியுள்ளது எதனால்? அது இந்தியாவின் விமானம் சிங்கப்பூர் விமானம் அல்ல. ஒருவேளை தினமலருக்கு AIR INDIA பெரிய அளவில் விளம்பரம் அளிக்கிறதா என்ன?


Senthoora
ஜன 10, 2025 17:03

மோடியை பாதுகாப்பதில் தினமலர் முதலிடம்,


Sidharth
ஜன 10, 2025 12:51

இதுதான்திராவிட மாடலா?- சங்கி ராம பக்தர்கள்.


N.Purushothaman
ஜன 10, 2025 12:05

கடந்த வாரத்தில் போயிங் ரக விமானத்தில் பயணிக்க மாட்டோமான்னு வாசகம் பிரபலமானது ....தேவைப்பட்டால் விமானங்களை முழு ஆய்விற்கு உட்படுத்துவது நல்லது ... ...


Gopal
ஜன 10, 2025 11:59

எந்த ஏர் லைன்ஸ்?


Abhivadaye
ஜன 10, 2025 10:54

இதே மாதிரி போலீஸ் ஏன் நடந்து கொள்ளல?


Ramesh Sargam
ஜன 10, 2025 10:16

அந்த விமான நிறுவனத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை? அவர்களுக்கு பிசினஸ் போய்விடுமோ என்கிற அச்சத்திலா? விமான ஓட்டியின் pilot சாதுரியத்தை மெச்சுகிறேன், வாழ்த்துகிறேன்.


ديفيد رافائيل
ஜன 10, 2025 12:19

உண்மை தான் முன்பு Air India இந்திய அரசு நிர்வாகத்தில் இயங்கிய போது கூட Air India என்று விமான நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு இதே dinamalar ல் news வந்துச்சு, எனக்கு நன்கு நினைவு இருக்கு. Private விமான நிறுவனத்தின் பெயரை வெளியிட மறுக்கின்றனர் பத்திரிக்கைகள்.