உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவின் பரிசு கர்நாடக இசை; விருது பெற்ற பாடகர் கிருஷ்ணா பெருமிதம்

இந்தியாவின் பரிசு கர்நாடக இசை; விருது பெற்ற பாடகர் கிருஷ்ணா பெருமிதம்

சென்னை : ''இசை உலகில், இந்தியாவின் பரிசாக கர்நாடக இசையின் ராகம் உள்ளது,'' என கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.தி மியூசிக் அகாடமியின், 98ம் ஆண்டு மாநாடு மற்றும் இசை கச்சேரி துவக்க விழா, சென்னை, மயிலாப்பூரில் நேற்று நடந்தது.இதில், கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, 'எம்.எஸ்.சுப்புலட்சுமி' விருதை, முன்னாள் நீதிபதி முரளிதர் வழங்கினார். ஜன., 1ம் தேதி வரை, 15 நாட்கள் நடத்தப்படும் விழாவில், 80 க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது:எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருது, என்னைப் போன்ற பாடகனுக்கு கிடைப்பது, எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். இந்த விருது, எனக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி உள்ளது. இசையை நாம் கற்கும்போதும், பயிற்சி செய்யும்போதும், அது நமக்கு என்ன வழங்கப்போகிறது என்பது, முழுமையாக தெரியாது.ஆனால், முழுமையாக ஒருவன் இசையை கற்றுக்கொண்டால், பின் நாளில், இசை நமக்கு வழங்கும் சிறந்த இடத்தை, வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாது. அதுபோல், கர்நாடிக் இசை, எனக்கும் ஒரு சிறந்த இடத்தை, மக்கள் மனதில் வழங்கி உள்ளது.ரசிகர்களை மகிழ்விப்பது, எவ்வாறு ஒரு இசைக் கலைஞருக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதேபோல்தான், அவர்களின் கைத்தட்டல்களும், இசைக் கலைஞர்களின் காதுகளுக்கு, புதுவிதமான இசையை வழங்குகிறது. இசைக் கலைஞர்கள் பலர் கூறியதுபோல், இசை உலகில் இந்தியாவின் பரிசாக, கர்நாடக இசையின் ராகம் உள்ளது. நம் அனைவருக்கும் உள்ளே ராகம் உள்ளது.இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, 'இந்திய கலையில் ராகத்தின் பிரதிபலிப்புகள்' என்ற கருப்பொருளில் பலரும், தங்கள் கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளனர். இசை நமக்கான அமைதியை, அர்ப்பணிப்பை கொடுக்கிறது. பலரது உடைந்த மனதை சமநிலைப்படுத்தும் மருந்தாக இசை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், முன்னாள் நீதிபதி முரளிதர் பேசுகையில், ''இசை குறித்து கூற வேண்டுமெனில், அது பல நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். அவை நமக்கு வழங்கும், உடல் மற்றும் மன ரீதியான அமைதி, உலகின் எந்த பகுதியிலும், யாராலும் வழங்க இயலாது. இன்று பலரின் வலி நீக்கியாகவும், உணர்வுகளை கட்டுப்படுத்தும் மருந்தாக இசை உள்ளது,'' என்றார். விழாவில், 'மியூசிக் அகாடமி' தலைவர் முரளி, சங்கீத கலாநிதி டாக்டர் சவுமியா, பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Bhaskaran
டிச 20, 2024 13:18

அடுத்து இசைவாணிக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி தன்னை பெருமைப் படுத்திக்கொள்ளும் சங்கீத வித்வத்சபை


Thiyagarajan S
டிச 19, 2024 08:04

எம் எஸ் எஸ் அவர்களை விமர்சித்து விட்டு அவர் பெயரை விருதை பெற்றுள்ளது டி எம் கிருஷ்ணாவிற்கு அவமானம் உண்மையிலேயே இவர் அந்த பெயரில் எனக்கு விருது வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும்


கிஜன்
டிச 18, 2024 03:58

to err is human to forgive is divine .... எம்.எஸ் அம்மா இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பார்கள் .... மன்னித்திருப்பார்கள் ....


Suresh R
டிச 17, 2024 12:02

Supreme Court has not recognised this award now


sankaran
டிச 16, 2024 16:25

தனக்கு தானே ஆள் செட்டப் செய்து பட்டம் பெற்று கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை ... மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் ...


Raman
டிச 17, 2024 16:57

Brilliant..


Oru Indiyan
டிச 16, 2024 15:14

ஹிந்து என்று பெயர் வைத்து கொண்டு ஹிந்து எதிர்ப்பு கொள்கை உள்ள பத்திரிகையை நான் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது


Baskar Kannabiran
டிச 17, 2024 08:01

ஏன் இந்த மதம்


Raman
டிச 17, 2024 16:59

Well said... most of our friends group stopped reading this magazine the Hindu for the past ,20 odd years


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 16, 2024 15:01

அடுத்த டிசம்பரில் தமிழக முதல்வர் தலைமையில் ஐயப்பன் பாடல் புகழ் இசை வாணிக்கு சங்கீதா கலா நிதி விருதும் எம் எஸ் விருதும் வழங்கப்பட இருக்கிறதாம்.


Kannan
டிச 16, 2024 20:53

தமிழக அரசின் கலைமாமணி விருது கன்பார்ம் சார்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 16, 2024 14:59

நீதிமன்றத்தில் எம் எஸ் பெயரில் விருது வழங்கக்கூடாது என்று தடை இருந்ததே. தடை உடைக்கப்பட்டுவிட்டதா?


Sundar R
டிச 16, 2024 13:13

என்ன பெருமை?


gopalasamy N
டிச 16, 2024 12:52

அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்ட நபர்களை புறக்கணிக்க வேண்டும்


முக்கிய வீடியோ