உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நிலுவை பத்திரங்களை விடுவிக்க சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு

 நிலுவை பத்திரங்களை விடுவிக்க சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு

சென்னை, ஜூன் 30- சார் - பதிவாளர் அலுவலகங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களை உடனடியாக விடுவிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்திரப்பதிவு முடிந்ததும், பத்திர பிரதிகள், 'ஸ்கேன்' செய்யப்படும். இதையடுத்து, அதே நாளில் பத்திரங்களை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், அதே நாளில் பத்திரங்கள் திருப்பி கொடுக்கப்படுவது இல்லை. இந்நிலையில், பதிவுத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் லோகேஷ், பல்வேறு மாவட்டங்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது, பெரும்பாலான அலுவலகங்களில், பதிவு முடிந்த பத்திரங்கள் கிடைக்கவில்லை என, மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, அமைச்சர் அறிவுரை அடிப்படையில், பதிவுத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, பதிவு முடிந்த நிலையில், உரிய காரணம் இன்றி பத்திரங்களை நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. பதிவு முடிந்த நாளில் அல்லது அதற்கு அடுத்த நாளில் பத்திரங்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும். உரிய காரணம் இன்றி பத்திரங்களை, லஞ்சம் வாங்குவதற்காக நிலுவையில் வைப்பது தெரியவந்தால், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை