உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த பாதிப்பையும் எஸ்.ஐ.ஆர்., ஏற்படுத்தாது

எந்த பாதிப்பையும் எஸ்.ஐ.ஆர்., ஏற்படுத்தாது

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி புதிது அல்ல. புதிதாக ஏதோ ஒன்றை தேர்தல் கமிஷன் திணிப்பதாக கருத வேண்டாம். ஏற்கனவே, பலமுறை இது நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் கூறு வது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல. திருத்தப் பணிகளுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதாக முதல் வர் ஸ்டாலின் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில், காவலர் குடியிருப்பிலேயே வெட்டிக் கொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முதலில், மன்னிப்பு கேட்டு வரட்டும்; நாங்களும் பொதுச்செயலரிடம் பேசுகிறோம். - -ஓ.எஸ்.மணியன் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 11, 2025 14:12

வாக்கு சீட்டு இருந்தால்தான் வாக்கு அளிக்கலாம் என்பதே தவறு. அப்படி என்றால் வாக்கு சீட்டுஇல்லாதவன் பாரத நாட்டின் குடிமகன் அல்ல. ஒரு தொகுதியில் தோற்ற ஒருவனை மாற்று தொகுதியில் நிற்கவைத்து வெற்றி பெற செய்து அமைச்சர் ஆக்குகிறோம். இதனை சட்டம் ஏற்கிறது. பாரதத்தில் பிறந்த ஒருவன் வாக்கு அளிக்க இயலாதவன் ஒரு செத்த பிணம்தாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி