உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அவகாசம் வேண்டும்

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அவகாசம் வேண்டும்

எஸ்.ஐ.ஆர்., பணிகள் மேற்கொள்வதில், நெருக்கடிகள் உள்ளன; கூடுதல் நிதி ஒதுக்கவில்லை; ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர் எனக் கூறி, மாவட்டத் தலைநகரங்களில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர். ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு, உரிய கால அவகாசம், எஸ்.ஐ.ஆர்., குறித்து முறையான பயிற்சி வழங்கவில்லை என்கின்றனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களாக உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள். எஸ்.ஐ.ஆர்., பணியோடு, தங்களின் வழக்கமான பணியை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், உடனே பணிகளை முடிக்குமாறு, மேல் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். எனவே, எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு, தேர்தல் கமிஷன் மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ