உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம்: பூத் ஏஜன்டுகள் சமர்ப்பிக்க அனுமதி

 எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம்: பூத் ஏஜன்டுகள் சமர்ப்பிக்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வாக்காளர்களால் நிரப்பப்பட்ட, 50 கணக்கெடுப்பு படிவங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் சமர்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர். இந்த பணியை வெற்றி கரமாக செய்து முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளின் பங்கு இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வரை, கணக்கெடுப்பு படிவங்களை, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் பெற்று வழங்க, இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள், நாள்தோறும், 50 நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது, 'என் னால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும், என் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன். 'தவறான தகவல்கள் அளிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக்கு உரியது என்பதை அறிவேன்' என்ற உறுதிமொழியும் அளிக்க வேண்டும். கட்சிகளின் ஏஜன்டுகளிடம் பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரிபார்த்து, 'டிஜிட்டல்' வடிவமாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அலுவலர், அந்த படிவங்கள் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மண்ணாந்தை
நவ 17, 2025 21:50

SIR படிவத்தை பூர்த்தி செய்ய ஒருவருக்கு என்ன வேண்டும். என்ன தெரிய வேண்டும்? 1. ஒருவருக்கு Voter ID card இருக்க வேண்டும் 2. தன் பெயர், தான் பிறந்த தேதி, தான் மொபைல் எண், தான் ஆதார் எண்(optional), தன் தந்தை மற்றும் தாயார் பெயர், பெற்றோரின் Voter ID எண் (optional) 3. 2002/2005 voter list ல பெயர் இருந்ததா இல்லையா. இருந்தது என்றால் தான் பெயர், அப்போது voter id ல oru உறவினர் பெயரை கொடுத்திருப்பீர்கள் அல்லவா அவர் தாயோ, தந்தையோ, யாரோ.. அவர் பெயர், அவர் என்ன உறவு (இது கூட எதற்கு கேட்கிறார்கள் என்றால், ஒரு வேளை voter list ல உங்கள் பெயர் இருக்கு பாகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் தேடி பிடிக்க வழி செய்யும் என்பதற்காக), உங்களுக்கு voter list விவரங்கள் தெரிந்தால் தொகுதி, பாகம் எண், வரிசை எண்களை நிரப்பிவிடலாம். 4. ஒருவேளை 2005 ல வாக்கு பட்டியலில் பெயர் இல்லை. அப்போது சிறுவராக இருந்து இப்போது வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், படிவத்தை கீழ் வலது பக்கத்தை பூர்த்தி செய்யவேண்டும். அங்கும் உங்கள் பெயர், அப்பா அம்மா பெயர் போன்ற சின்ன விவரங்கள் தான் தெரியவேண்டும் இதற்கு ஏன் இவ்வளவு கூக்குரல். புரியவில்லை.


Anand
நவ 17, 2025 11:34

எஸ் ஐ ஆர் படிவம் நிரப்புவது மிகவும் சுலபம், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர்களின் பெயர், இவ்வளவுதான்.


Ram
நவ 17, 2025 09:11

sir என்பது அவசியமான ஒன்று , சொல்லப்போனால் அந்தபடிவதில் ஒன்னும் பெரிதாக எழுத்துவதற்கில்லை , ரொம்பவும் சுலபமாக இருக்கு , தேவையில்லமல் இதை அரசியலாக்காமல் , மேகதாதுவை எதிர்த்து போராடவேண்டும் , ஆனால் அதைசெய்யமாட்டார்கள் . தி மு க கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதுதான் , கர்நாடகாவில் கபினி அணையை கட்டினார்கள் , ltte மற்றும் தமிழர்களை இலங்கையில் கொன்றுகுவித்தார்கள் , தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஸ்டெர்லைட்டை எதிர்த்ததால் போய்விட்டது ,


Mario
நவ 17, 2025 09:07

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..


Mario
நவ 17, 2025 09:07

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..


Barakat Ali
நவ 17, 2025 08:11

திமுக புகுந்து விளையாடிவிடும் .......


ASKR TRUST
நவ 17, 2025 13:27

அதெல்லாம் எலக்ஷன் கமிஷன் கண்காணிக்கும்.


Kasimani Baskaran
நவ 17, 2025 04:11

பாஜக பூத் ஏஜென்ட்கள் தீம்க்காவின் கட்டளைக்காக காத்திருப்பார்கள். உண்மையான தேசியவாதியாக இருந்தால் தீம்க்கா பூத் ஏஜென்ட் கொடுக்கும் ஒவ்வொரு படிவத்தையும் கவனமாக சரிபார்க்க வேண்டும்.


Suppan
நவ 17, 2025 16:20

திமுக ஏஜென்ட்டுகள் எல்லா படிவங்களையும் ஒழுங்காகக் கொடுப்பார்களா? இல்லை பக்கோடாக்கடைகளுக்கு விற்றுவிடுவார்களா? மற்ற கட்சி ஏஜெண்டுகள் கண் குத்திப்பாம்பாகப்பார்க்க வேண்டும். மற்ற கட்சி ஏஜெண்டுகள் மிகக்குறைவாகக் காணப்படுகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை