உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி; சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.ஆண்டியபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u3cvx5cg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் அவர்கள் இறங்கினர்.இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sudha
ஜூலை 21, 2025 21:05

இறந்தோர் காப்பீடு செய்யப்பட்டிருந்தனரா? நஷ்டஈடு தருவோர் யார்? உரிமையாளர்கள் யார்? குட்டி ஜப்பானா? பாலஸ்தீனமா? சிபிஐ விசாரணை செய்வது நல்லது


V.Mohan
ஜூலை 21, 2025 17:41

இந்த மாதிரி ஆபத்தான வெடி மருந்துகளை ரோபோட்டிக்கை வைத்து செய்ய உடனடி சட்டம் போட வேண்டும். மனிதர்களுக்கு ஆபத்தில்லாத வேலையை வழங்க வேண்டும். செய்யுமா இந்த இருண்டு போன அரசு..?


தென்காசி ராஜா ராஜா
ஜூலை 21, 2025 17:33

இந்த ஆட்சியில் இருந்து மிக மிக அதிகமாக விபத்து நடக்கிறது என்ன காரணம்?


Svs Yaadum oore
ஜூலை 21, 2025 16:44

2 பெண்கள் உள்பட 3 பேர் பலி ...மேலும் பலர் படுகாயம் .... இது என்னய்யா தினம் தினம் வெடிக்குது .....இதுக்கு அரசாங்கம் எதுக்கு இருக்குது ??....தினமும் ஒருத்தன் செத்தால் கூட இங்கு விடியவே விடியாதா ??.....எத்தனை ஏழை மக்கள் பலியானால் இங்கு விழிப்பு வரும் ..இதை கேள்வி கேட்கவும் இங்கு எதிர் கட்சிகள் எதுவும் இல்லை ...இங்குள்ள மக்களுக்கு ஓசி பிரியாணி சாராயம் மட்டும் இருந்தால் போதும்....அவனவன் குடும்பத்தில் அடி விழுந்தால்தான் இங்குள்ளவனுக்கு உணர்வு வரும் ..


சமீபத்திய செய்தி